வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்| Ayyapan Bajanai Baadal Varigal In Tamil 

Updated On: December 16, 2025 4:00 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Ayyapan Bajanai Baadal Varigal In Tamil 

இன்றைய பதிவில் ஐயப்பன் பாடல் வரிகள் பற்றி பார்க்க போகிறோம். நாம் ஏதாவது கோவிலுக்கு சென்றலோ அல்லது வீட்டில் ஏதேனும் பூஜை செய்தாலோ என்ன பூஜை செய்கிறோம், எந்த கடவுளை பிராத்தனை செய்கிறோம், என்பதற்கு ஏற்றவாறு தான் மற்ற அனைத்தினையும் செய்வோம். அப்போது பார்த்தால் பூஜை செய்யும் போது அந்த கடவுளுக்கு உரிய பாடலை கேட்பது மற்றும் பாடுவது என இந்த முறையினை செய்வது என்பது சாதாரணமான ஒன்று. இதன் படி பார்த்தால் இப்போது பெரும்பாலான ஆண்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்த பிறகு மலைக்கு செல்வார்கள்.

இத்தகைய 48 நாட்களும் ஐயப்பனுக்கு உரிய பாடலை பாடவும் செய்வார்கள். அதோடு மட்டும் இல்லாமல் கன்னி பூஜை, பாத பூஜை என இதுபோன்ற பூஜையிலும், ஐயப்பனுக்கு உரிய பஜனை பாடல்கள் பற்றி இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். 

ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்:

சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம் - தமிழ்ஹிந்து

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது 

ஐயப்பன் கோவிலிலே சந்தனம் மணக்குது 

என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது 

இன்பமான ஊதுவத்தி அங்கெ மணக்குது 

 

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது 

ஐயப்பன் கோவிலிலே சந்தனம் மணக்குது 

எங்கே மணக்குது நெய்யும் எங்கே மணக்குது 

வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது

 

திருநீரும் மணக்குது பன்னீரும் மணக்குது 

ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது 

ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பும் மணக்குது 

 

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது 

ஐயப்பன் கோவிலிலே சந்தனம் மணக்குது

பள்ளிக்கட்டை சுமந்துக்கிட்டா பக்தி பிறக்குது 

அந்தப்பணிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது

பகவானை பார்த்துவிட்டா பாவம் பறக்குது 

பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது 

 

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது 

ஐயப்பன் கோவிலிலே சந்தனம் மணக்குது

பேட்டை துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது 

 

ஐயன் பேரழகை காண உள்ளம் ஆசைகொள்ளுது 

காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது 

வீட்டை மறந்து பக்தர்கள் கூட்டம் காட்டிலிருக்குது 

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது

ஐயப்பன் மந்திரங்கள்.! | Ayyappan Mantra in Tamil

ஐயப்பன் கோவிலிலே சந்தனம் மணக்குது

பூங்காவன தொப்புக்குள்ளே பவனி வருகிறான் 

வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான் 

நோன்பிலிருந்து வருவோரை தாங்கி நிற்கிறான் 

ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான் 

 

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது 

ஐயப்பன் கோவிலிலே சந்தனம் மணக்குது

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா

சாமி ஐயப்பா…. சாமி ஐயப்பா….

சாமி ஐயப்பா….

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்



Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now