ஐயப்பன் மாலை போடும் விதிமுறைகள்..!

Advertisement

ஐயப்பன் மாலை போடும் விதிமுறைகள் | Ayyappan Malai Podum Vithimuraigal In Tamil

ஐயப்பன் பக்தர்களுக்கு வணக்கம்…! ஐயப்பன் பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுவார்கள்.ஐயப்பனுக்கு மாலை போடும் விதிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.ஐயப்பன் பக்தர்கள் கடும் விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள்.ஐயப்பன் சாமிக்கு முதல் தடவை மாலை அணிபவர்களை கன்னிசாமி என்று கூறுவார்கள்.

ஐயப்பன் சாமிக்கு மாலை அனுபவர்கள் காலை மாலை இரு வேலையும் ஐயப்பனுக்கு பூஜை செய்து ஐயப்பனை வழிபடுவார்கள்.மலை அணிந்திருப்பவர்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டும்.ஐயப்பன் பக்தர்கள் மலை அணியும் முறையையும் விரதம் இருக்கும் முறையையும் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்..!

ஐயப்பன் மாலை போடும் விதிமுறைகள்:

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் குறைந்தது 41 நாட்களாவது மாலை அணிந்து விரதம் இருக்க வேண்டும்.ஐயப்பன் மாலை 108 துளசி மணி கொண்டதாகவோ அல்லது 54 ருத்ராட்ச மணி கொண்டதாகவோ இருக்க வேண்டும்.அந்த மாலையில் ஐயப்பன் டாலர் கட்டாயமாக இருக்க வேண்டும்.மாலையை ஐயப்பன் சன்னதியில் வைத்து பூஜை செய்து குருசாமி கைகளால் அணிய வேண்டும்.

பக்தர்கள் மாலை அணிந்த பிறகு கோபம், பகை, சண்டையிடுதல், பழிதீர்த்தல் என்று எந்த ஒரு தீய எண்ணமும் இல்லாமல் நன்மை எண்ணத்தோடு மட்டுமே இருக்க வேண்டும்.பக்தர்கள் ஒரு வேலை உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.பக்தர்கள் வெறும் தரையில் தான் படுக்க வேண்டும்.மேலும் தாம்பத்திய உறவு கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும்.குளிர்ந்த நீரில் காலையும் மாலையும் குளித்து ஐயப்பனுக்கு பூஜை செய்து பழத்தையோ அல்லது வெறும் பாலையோ நைவேத்தியமாக  வைத்து சாமியே சரணம் ஐயப்பா என்று வழிபட வேண்டும்.

ஐயப்பன் விரதம் இருக்கும் விதிமுறைகள்:

பக்தர்கள் உணவு உட்கொள்வதோ அல்லது மூன்று வெள்ளையும் விரதம் இருப்பதோ அவர்களின் விருப்பம் ஆனால் ஒரு வேலையாவது உணவு உட்கொள்ளாமல் விரதம் இருப்பது நல்லது.பக்தர்கள் சைவ உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.ஐயப்பனுக்கு முதல் தடவை மாலை அணிபவர்கள் கருப்பு உடை மட்டுமே அணிய வேண்டும்.மற்ற ஆண்டுகளில் கருப்பு, காவி மற்றும் நீல உடை அணியலாம்.அலுவலகத்திற்கு செல்பவர்கள் இந்த உடைகளை அனியாவிட்டாலும் பரவாயில்லை.

ஐயப்பன் பக்தர்கள் காலணிகளை பயன்படுத்த கூடாது.அலுவலகத்திற்கு காலனி அணிய வேண்டிய கட்டாயம் இருந்தால் அணிந்து கொள்ளலாம்.அதேபோல் பக்தர்கள் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியமானது.ஐயப்பன் மாலை அணிந்திருக்கும் பக்தர்களும் துக்க வீடுகளுக்கோ அல்லது பெண்களின் சடங்கு விழாவிற்கோ செல்ல கூடாது.ஐயப்பன் மாலை அணிந்திருப்பவர்கள் ரத்த சொந்தக்களில் யாரேனும் இறந்து விட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழட்டிய பின்னரே துக்கத்திற்கு செல்ல வேண்டும்.

மது, மாமிசம், புகைபிடித்தல் போன்ற செயல்களை செய்ய கூடாது.மாலை அணிந்திருப்பவர்கள் அவர்கள் வீட்டில் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.பெண்கள் மாதவிடாயின் போது அவர்கள் உணவு சமைக்க கூடாது மேலும் 7 நாட்களுக்கு பிறகே உணவு செய்ய வேண்டும்.மேலும் மாலை அணிந்திருப்பவர்கள் முடி வெட்டுதல் ஷேவ் செய்தல் கூடாது மற்றும் மெத்தை தலையணை பயன்படுத்தாமல் ஜமுக்காளம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எதிர்பாராத விதமாக மாலை அறுந்து விட்டால் மனம் தளராமல் மாலையை சரி செய்து போட்டுக்கொள்ளலாம்.

ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் முன்பு இருமுடி பூஜையை வீட்டிலோ அல்லது கோவிலிலோ அல்லது குருசாமி இடத்திலோ பூஜை செய்ய வேண்டும்.பம்பை நதியில் நீராடிய பின்னரே மலை ஏறி 18 படிகள் தாண்டி ஐயப்பனை தரிசிக்க வேண்டும்.திரும்பியபின் ஐயப்பனின் அருள் பிரசாத்தை தலையில் ஏந்தியபடி தேங்காயை வீட்டின் முன் உடைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும்.கடைசியாக குருசாமி கூறும் மந்திரதத்தை கூறி மாலையை கழற்றி ஐயப்பன் சன்னதியில் வைத்து தீபாராதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும்.

ஐயப்பன் மந்திரங்கள்.!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement