ஐயப்பன் மந்திரங்கள்.! | Ayyappan Mantra in Tamil

Advertisement

ஐயப்பன் மந்திரம் தமிழில்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயப்பன் சுவாமியின் மந்திரங்கள் பற்றி கொடுத்துள்ளோம். ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்களை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே நம் அனைவரது நினைவிற்கு வருவது ஐயப்பன் சுவாமி தான். இம்மாதத்தில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிவித்து ஐயப்பன் சுவாமியை தரிசிக்க சபரிமலைக்கு செல்வார்கள்.

48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து ஐயப்பனை காண செல்வார்கள். இவர்கள் விரதம் இருந்து ஐயப்பனை வழிபடும் நாட்கள் முழுவதும், ஐயப்பனின் பக்தி பாடல்களையும் மந்திரங்களை காலை மாலை என இரு வேலையும் உச்சரிக்க வேண்டும். ஆகையால், அவர்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் ஐயப்பன் சுவாமியின் மந்திரங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

Ayyappan Mantra in Tamil:

ஐயப்பன் மந்திரம் தமிழில்

ஐயப்பன் மூல மந்திரம்:

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம;

ஐயப்ப காயத்ரி மந்திரம்:

ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏன் 18 படிகள் உள்ளது.? அந்த 18 படிகளுக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ:

ஓம் பூதாதி பாய வித் மஹே
மஹா தேவாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்

ஐயப்பன் மகா மந்திரம்:

பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ;

மகா கணபதி தியான ஸ்லோகம்:

மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

மாலை அணியும்போது சொல்ல வேண்டிய மந்திரம்:

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம;

ஐயப்பன் 108 சரணம் கோஷம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement