காலபைரவரை வழிபாடும் முறை
நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே கோவிலுக்கு செல்லும் பழக்கம் இருக்கும். இப்போது நாம் வாழும் காலம் எவ்வளவு தான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறி இருந்தாலும், ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதிலும் சிலருக்கு சில கடவுளின் மீது அதீத பற்று இருக்கும். அப்படி அதீத பற்று கொண்ட கடவுள்களில் கால பைரவரும் ஒருவர். நம்மில் பலரும் தன் அன்றாட வாழ்வில் காலபைரவரை மட்டும் வழிபட்டு வருவார்கள். அதனால் தான் நம் பதிவில் கால பைரவரை ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கப்போகிறோம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் ஏற்படும் நன்மைகள்
ஒவ்வொரு ராசியினரும் பைரவரை எப்படி வழிபட வேண்டும்:
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் கால பைரவரை திங்கள் கிழமைகளில் வழிபடலாம். கோவிலுக்கு சென்று பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் கொண்டு வழிபாடு செய்யலாம்.
இதுபோல ஒவ்வொரு திங்கள் கிழமையும் செய்து வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும் சந்தன காப்பு அணிவித்து அபிஷேகம் செய்து வந்தால் செல்வம் சேரும்.
மகரம் மற்றும் கும்பம்:
மகரம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் கால பைரவரை சனிக் கிழமைகளில் வழிபடலாம். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி, செவ்வரளி மலர் கொண்டு வழிபாடு செய்யலாம். இதுபோல செய்து வந்தால் சனியின் பாதிப்புகள் குறையும். மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம் மற்றும் கன்னி:
மிதுனம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள் கால பைரவரை புதன் கிழமைகளில் வழிபட்டு வரலாம். கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்கள் நெய் தீபம் ஏற்றி, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும்.
பிரம்ம முகூர்த்தம் ரகசியத்தைப் பற்றி தெரியுமா.. இதில் ஏன் திருமணம் செய்கிறார்கள் தெரியுமா..
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கால பைரவரை ஞாயிற்று கிழமைகளில் வழிபட வேண்டும். திருமண தடை உள்ளவர்கள் ராகு காலத்தில் வடை மாலை சாற்றி, ருத்ராட்ச அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணம் தடை நீங்கும்.
மேஷம் மற்றும் விருச்சிகம்:
மேஷம் மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கால பைரவரை செவ்வாய்க் கிழமைகளில் வணங்கி வரலாம். கோவிலுக்கு சென்று மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். செவ்வாய் கிழமையில் வரும் அஷ்டமி திதி அன்று மிளகு தீபம் ஏற்றி, பைரவ மூல மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். மேலும் இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும்.
தனுசு மற்றும் மீனம்:
தனுசு மற்றும் மீன ராசியில் பிறந்தவர்கள் கால பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடலாம். கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தீய சக்திகள் விலகி நன்மை உண்டாகும். மேலும் தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் இழுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றி, பைரவ மூல மந்திரத்தை உச்சரித்து வந்தால் செல்வம் பெருகும்.
ரிஷபம் மற்றும் துலாம்:
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கால பைரவரை வெள்ளிக் கிழமைகளில் வழிபடலாம். கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, வில்வம் மற்றும் செவ்வரளி மலர்கள் கொண்டு வழிபட்டு வந்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும். மேலும் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.
மேலும் அனைத்து ராசியில் பிறந்தவர்களும் கால பைரவரை தொடர்ந்து 21 அஷ்டமி திதிகளில் 5 எண்ணெய்களை கொண்டு 5 தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து வந்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |