பைரவருக்கு உகந்த நாள் மற்றும் வழிபாட்டு பொருட்கள்.!

Advertisement

பைரவருக்கு உகந்த நாள் மற்றும் பொருட்கள்

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம. இப்பதிவில் பைரவருக்கு உகந்த பொருட்கள் மற்றும் கிழமை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவர் பைரவர். பைரவர் நம்மிடம் இருக்கும் பயத்தை நீக்கி தைரியத்தை அளிக்கக்கூடியவர். எனவே, பைரவரை வழிபட்டு வந்தால் நம்மிடம் இருக்கும் பயமும் திருஷ்டியும் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, பைரவரை வழிபடும்போது அவருக்கு உகந்த எண்ணெய், பூக்கள், நாள் அறிந்து அதற்கேற்ப வழிபாடு செய்தால் நற்பலன்களை பெறலாம்.

எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் பைரவரை எந்த நாளில் வழிபட வேண்டும்.? அவருக்கு உகந்த பூக்கள் எது.? அவருக்கு உகந்த பிரசாதம் எது.? என்பதை அறிந்து இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்து நற்பலன்களை பெறலாம்.

கால பைரவர் மந்திரம்

பைரவருக்கு உகந்த எண்ணெய்:

பைரவருக்கு உகந்த எண்ணெய்யாக நல்லெண்ணெய் இருக்கிறது. எனவே, பைரவரை வழிபடும்போது ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

பைரவருக்கு உகந்த மலர்/மாலைகள்:

பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்ததாக இருக்கிறது. குறிப்பாக செவ்வரளி பூ கொண்டு பைரவருக்கு பூஜை செய்யலாம். மேலும், தாமரைப்பூ மாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை, செவ்வரளி மாலை மற்றும் செவ்வந்தி மாலை உகந்த மாலை ஆகும்.

பைரவருக்கு உகந்த எண்ணெய்

பைரவருக்கு உகந்த நாள்:

பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி ஆகும். எனவே, மாதந்தோறும் வரும் அஷ்டமி நாளில் பைரவரை வழிபடலாம். வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி நாளிலும் பைரவரை வழிப்படலாம். அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது இன்னும் சிறந்தது.

பைரவருக்கு உகந்த பிரசாதம்:

சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், அவல் பாயசம், பால் மற்றும் பழ வகைகள் உகந்த உணவுப்பொருட்களாக இருக்கிறது. எனவே, பைரவரை வழிப்படும்போது, இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நெய்வேத்தியமாக படைத்து வழிபடுவது நல்லது.

பைரவருக்கு உகந்த அபிஷேகம்:

பைரவருக்கு பிடித்தது சந்தன காப்பு. எனவே, இதில் புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தன காப்பு செய்து அபிஷேகம் செய்து வழிபடலாம். இதனை தவிர்த்து பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் விசேஷமாக கருதப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி அன்று இந்த தீபத்தை ஏற்றினால் கோடி கடனும் தீர்ந்து விடும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement