வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா பாடல் வரிகள்

Updated On: April 23, 2024 4:19 PM
Follow Us:
bakyamthan lakshmi lyrics in tamil
---Advertisement---
Advertisement

Bakyamthan Lakshmi Lyrics in Tamil

பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் ஒவ்வொரு விதமாக பக்தியை வெளிப்படுத்துவார்கள். சில பேர் சாமிக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். சில பேர் காலை மற்றும் மாலை பொழுதில் விளக்கேற்றி கடவுளுக்கு உரிய பாடல் வரிகளை கூறி வணங்குவார்கள். இப்படி கடவுளுக்கு உரிய பாடல் வரிகளை சொல்லி வணங்கும் போது அவரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது.

இந்த பாடல் வரிகள் ஆனது சில பேருக்கு மனப்பாடமாக தெரியும், சில பேர் புத்தகத்தை வைத்து படிப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் புத்தகம் வாங்கி படிப்பதில்லை. காரணம் மொபைல் தான் இருக்கிறதே. இதில் பாடல் வரிகளை போட்டால் வந்துவிடும். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் பாக்கியம் தான் லட்சுமி பாடல் வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க..

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா பாடல் வரிகள்:

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க
மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
கனக வ்ருக்ஷமாய் தனமழை தருக
மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக
தினகரன் கோடி உன் மேனியில் உருக
ஜனகராஜன் திரு கண்மணி வருக
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா
சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் செய்தாய்
குங்கும பூவாய் பங்கயப் பாவை
வேங்கடரமனின் பூங்கொடி வாராய்
பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்
சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய்
அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர
விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..
என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now