பண்ணாரி மாரியம்மன் கோவில் வரலாறு..!

பண்ணாரி மாரியம்மன் கோவில்

பண்ணாரி மாரியம்மன் கோவில் வரலாறு (Bannari amman temple history in tamil)..!

bannari amman temple history in tamil: தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த அம்மன் கோவில்களில் இந்த பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் சிறந்து விளங்குகிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஆலயம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் –  மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209-யில் பண்ணாரி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

இங்கு மூலவராக மாரியம்மன் அமைந்துள்ளார், தல விருட்சமாக வேங்கை மரமும், தீர்த்தமாக தெப்பக்கிணறும் அமைந்துள்ளது. சரி இந்த சிறப்பு வாய்ந்த ஆலயத்தை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க…

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

பண்ணாரி மாரியம்மன் கோவில் சிறப்பு:-

இந்த ஆலயத்தில் அம்மன் தெற்கை நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இந்த கோவிலில் விபூதி கிடையாது. அதற்கு பதில் புற்று மண் தான் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பண்ணாரி மாரியம்மன் கோவில் வரலாறு (Bannari amman temple history in tamil)..!

சுமார் 300 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த சுற்று வட்டார மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது வழக்கம். அவற்றில் ஒரு பசு தனியாக சென்று வருவதை மேய்ப்பான் கவனித்து விட்டான். பின் அந்த பசுவை பின் தொடர்ந்து பார்க்கையில் அப்பசு தனது பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணம் புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிசையாக பொழிவதை பார்த்தான்.

இதை ஊர் மக்களிடம் தெரிவிக்க ஊர் மக்கள் அங்கு வந்து அப்பகுதியை சுத்தம் செய்கையில் கணம்புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்கத் திருவுருவமும் வேங்கை மரத்தடியில் இருப்பதை கண்டனர். அப்போது அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து கேரளாவிலிருந்து பொதிமாடுகளை ஒட்டிக்கொண்டு மைசூர் செல்பவர்களுக்கு வழித்துணையாக வந்தேன், எழில் மிகுந்த இவ்விடத்தில், தான் தங்கி விட்டதாகவும், தன்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் என்று போற்றி வழிபடுமாறு அருள் வாக்கு கூறினார். அங்குள்ள மக்கள் அதற்கு ஒரு குடில் அமைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அம்மனின் அருள் பரவத்தொடங்கி இப்போது மிக சிறப்பு வாய்ந்த, புகழ் பெற்ற கோவிலாக இந்த பண்ணாரி அம்மன் ஆலயம் திகழ்கின்றது.

வலங்கைமான் மாரியம்மன் கோவில் வரலாறு..!

பண்ணாரி மாரியம்மன் கோவில் நேர்த்திக்கடன்:-

பக்தர்கள் நேர்த்திக்கடனாக கை, கால், கண் போன்றவற்றின் உருவத்தகடுகள் வாங்கி அர்ச்சனை செய்து அங்குள்ள உண்டியலில் போடுகிறார்கள்.

அக்னிகுண்டம் இறங்குதல், மெரவனை வேல் எடுத்து சுத்துதல், கெடா வெட்டுதல், அம்மனுக்கு தீபம் ஏற்றுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அபிஷேக ஆராதனை செய்தல் போன்றவற்றை இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

பண்ணாரி மாரியம்மன் கோவில் பிராத்தனை:

கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம் பெற, வேலை கிடைக்க என்று அனைத்து பிராத்தனைகளும் நிறைவேறுகின்றது.

மேலும் திருமணம் பாக்கியம், கை கால் போன்று உடல் உறுப்புகளில் குறைப்படுள்ளவர்கள், விவசாயம் செழிக்க வேண்டுவோர் இவ்வாலயத்திற்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.

பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா:-

பங்குனி கொண்டம் பெருந்திருவிழா 20 நாள் திருவிழா. 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் இதை தவிர செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் இந்த கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!

பண்ணாரி மாரியம்மன் கோவில் திறக்கப்படும் நேரம்:

காலை 06.00 முதல் 12.00 மணி வரையும் பின் மாலை 04.00 முதல் இரவு 09.00 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்