பரணி தீபம் ஏற்றும் முறை | Barani Deepam Etrum Murai In Tamil
பரணி தீப திருநாள் கார்த்திகைக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பரணி தீபம் டிசம்பர் 12-ஆம் தேதி வருகிறது. பரணி தீபத்தை எம தீபம் என்றும் கூறுவார்கள். பரணி தீபம் கார்த்திகைக்கு முந்தைய நாள் ஏற்ற வேண்டும் என்று நமக்கு தெரியும் அதை எப்படி ஏற்ற வேண்டும் என்று தெரியுமா? இந்த பதிவில் பரணி தீபம் ஏற்றும் முறையை தான் பார்க்கப்போகிறோம்.
பரணி தீபம் 5 விளக்குகளை வைத்து ஏற்ற வேண்டும். முதலில் நம் வீட்டு நிலை வாசலில் விளக்கை ஏற்றிய பிறகு தான் நம் வீட்டிற்குள் பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். பரணி தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
பரணி தீபம் என்றால் என்ன?
பரணி தீபத்தை எம தீபம் என்றும் கூறுவார்கள். மனிதர்கள் எம வேதனையிலிருந்து விடுபடுவதற்காக பரணி தீபம் ஏற்றி மனதார சிவ பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் மனிதர்களின் பாவ கர்மாக்கள் நீங்கி எம வாதனையில் பிடிபடாமல் சென்றடைவீர்கள் என்று எமனே கூறியிருக்கிறார்.
பரணி தீபம் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை பாருங்கள்👉பரணி தீபம் வரலாறு In Tamil
பரணி தீபம் ஏற்றும் முறை:
பரணி தீபம் ஏற்றும் நேரம்:
- பரணி தீபம் திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் நம் வீட்டில் மாலை 6 மணிக்கு மேல் 5 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை அன்று அதிகாலை இந்த பரணி தீபத்தை ஏற்றுவார்கள்.
- 5 விளக்குகளுக்கான காரணம் என்ன என்றால் பஞ்சபூத சக்திகளின் ரூபமாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்காக ஏற்ற கூடிய தீபம் தான் பரணி தீபம் ஆகும்.
விரதம் இருக்கும் முறைகள்:
- பரணி தீபத்தன்று காலையிலிருந்து நாள் முழுவதும் விரதம் இருந்து அடுத்த நாள் திருக்கார்த்திகை அன்றும் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை அண்ணாமலையாரோட ஜோதியை பார்த்து வீட்டில் விளக்கேற்றிய பிறகு தான் விரதத்தை முடிக்க வேண்டும்.
- இரண்டு நாள் முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் பரணி தீபத்தன்று மாலை கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் அடுத்த நாள் திருக்கார்த்திகை அன்றும் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை அண்ணாமலையாரோட ஜோதியை பார்த்து விரதத்தை முடிக்க வேண்டும்.
- மௌன விரதம் இருந்தால் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். திருக்கார்த்திகை அன்று நீங்கள் மௌன விரதம் இருந்தால் மிகவும் நல்லது. மௌன விரதம் இருப்பது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.
பரணி தீபம் எப்படி ஏற்ற வேண்டும்:
- பரணி தீபம் அன்று 5 விளக்குகள் கண்டிப்பாக ஏற்ற வேண்டும். சிவ பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், அருளுதல், மறைத்தல் போன்ற 5 தொழில்களை செய்வதால் தான் நாம் 5 விளக்கு ஏற்றுகிறோம்.
- முதலில் நம் வீடு நிலை வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும் அதன் பிறகு தான் வீட்டிற்குள் ஏற்ற வேண்டும். நாம் சுவாமியை வாசலிலிருந்து வீட்டிற்குள் அழைத்து செல்வதாக அர்த்தம்.
- வீட்டிற்குள் சென்று சுவாமி முன்பு 5 விளக்குகள் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும் நெய் இல்லையென்றால் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாம். ஆனால் ஒரு விளக்கவாது நெய் ஊற்றி ஏற்றினால் மிகவும் நல்லது.
- 5 விளக்குகள் 5 திசைகளை நோக்கி வட்டமாக இருக்க வேண்டும். நைவேத்தியம் சுவாமிக்கு வைத்து சிவன் பாடல்களை பாடி வில்வ இலைகள் மூலம் அர்ச்சனை செய்து பரணி தீபத்தை ஏற்ற வேண்டும்.
- பரணி தீபத்தை ஏற்றி நம் பாவ கர்மாக்களை அகற்றி எம வாதனையிலிருந்து விடுபடுவோம். பரணி தீபத்தை ஏற்றி சிவபெருமானை மனதார வழிபட்டால் சிவனுடைய அருள் நமக்கு கிடைக்கும்.
கார்த்திகை தீபம் முறையாக ஏற்றுவது எப்படி
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |