வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அட்டாச்சிடு பாத்ரூம் வைத்திருப்பவர்கள் வாஸ்துப்படி இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

Updated On: February 15, 2023 4:05 PM
Follow Us:
Bathroom Vastu Tips
---Advertisement---
Advertisement

அட்டாச்சிடு பாத்ரூம் வாஸ்து சாஸ்திரம் 

Bathroom Vastu Tips – பொதுவாக வாஸ்து முறை படி அனைத்து விஷயங்களையும் செய்து வருவதன் மூலம். நமக்கு ஏற்படும் விரையங்களை ஓரளவு சரி செய்ய முடியும். ஆக வாஸ்து முறை படி நாம் வீடு கட்டினோம் என்றால் எந்த பிரச்சனையும் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம். வாஸ்து படி வீடு கட்டவில்லை என்றால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பாத்ரூம் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது உங்கள் வீட்டில் அட்டாச்சிடு பாத்ரூம் வைத்துள்ளீர்கள் என்றால் இன்றைய பதிவு உங்களுக்கானது தான். சரி அட்டாச்சிடு பாத்ரூம் வைத்திருப்பவர்கள் வாஸ்துப்படி செய்யக்கூட தவறுகள் என்ன என்பதை படித்தறியலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாஸ்து நாட்கள்

அட்டாச்சிடு பாத்ரூம் வைத்திருப்பவர்கள் வாஸ்துப்படி இந்த தவறுகளை செய்யாதீர்கள்..! | Bathroom Vastu Tipsஅட்டாச் பாத்ரூம் வாஸ்து

அட்டாச் பாத்ரூம் வாஸ்து: 1

பொதுவாக அட்டாச்சிடு பாத்ரூமின் நுழைவு வாசலானது வாஸ்து முறைப்படி வடக்கு அல்லது கிழக்கு சுவற்றில் இருக்க வேண்டும். அதேபோல் குளிக்கும் அறையானது தென்மேற்கு திசையில் சரியானது அல்ல. பெட்ரூமில் குளியல் அறை இருந்தால் பயன்படுத்தாத போது க்ளோஸ் செய்து வைக்கவும்.

அட்டாச் பாத்ரூம் வாஸ்து: 2

பெட்ரூமில் குளியல் அறை இருந்தால் நீங்கள் உறங்கும் போது உங்கள் கால்களை குளியல் அறையை நோக்கி உறங்கக்கூடாது. ஒருவேளை நீங்கள் அப்படி உறங்கில் உங்கள் வீட்டில் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். மேலும் வீண் செலவுகளும் அதிகமாக இருக்கும்.

அட்டாச் பாத்ரூம் வாஸ்து: 3

இப்போது பலரது வீட்டில் வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்துகின்றன. இந்த கழிவறையை பயன்படுத்திய பிறகு பலர் அந்த டாய்லெட்டில் உள்ள மூடியை மூடுவது இல்லை. இவற்றை மூடாமல் இருந்தால் அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் வீட்டில் நிதி பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

அட்டாச் பாத்ரூம் வாஸ்து: 4

வாஸ்து முறைப்படி பெட்ரூமில் அட்டாச்சிடு பாத்ரூம் வைத்திருப்பவர்கள், அந்த பாத்ரூமை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அசுத்தமாக வைத்துக்கொண்ட அந்த வீட்டில் தரித்திரம் தலைவிரித்தாடும். அவர்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும், குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் ஏற்படும்.

அட்டாச் பாத்ரூம் வாஸ்து: 5

பெட்ரூமில் உள்ள பாத்ரூம் சுவர் மற்றும் கதவு வெளிர் நிறத்தில் இருப்பது மிகவும் சிறந்தது. அதேபோல் அந்த பாத்ரூமில் உள்ள தரையும் வெளிர் நிறத்தில் இருக்கலாம். இப்படி செய்வதனால் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் எதுவும் இருக்காது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடனுக்கு மேல் கடன் சுமையை ஏற்படுத்தும் வாஸ்து அமைப்புகள்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now