உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வாஸ்து படி வைத்துருக்கிறீர்களா?

House Things Direction in Tamil

வீட்டில் எந்த திசையில் எந்த பொருட்களை வைக்கலாம்? | House Things Direction in Tamil 

வாஸ்து பார்ப்பதற்கு முக்கிய காரணமே நாம் செய்யும் காரியங்கள் எந்த வித கெட்ட பலனையும் தர கூடாது என்பதற்கு தானே. செய்யும் செயல்கள் மட்டும் இல்லை வீடு கட்டுவதில் எந்தெந்த அறைகள் எங்கெங்கு இருக்க வேண்டும் என்பதை வாஸ்து படி தான் பார்ப்போம். இவர்கள் அவர்கள் மட்டும் தான் வாஸ்து பார்ப்பார்கள் என்று இல்லை. அனைவருமே வாஸ்து பார்ப்போம். வாஸ்து படி வீடு கட்டி விட்டுடோம். வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்து படி வைத்திருக்கிறோமா.! இல்லை அப்படியென்றால் இனிமேல் வாஸ்து படி பொருட்களை மாற்றுங்கள். எப்படி மாற்றுவது என்று யோசிக்கிறீர்களா.! இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்கள் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தான் சொல்ல போகிறோம். படித்து தெரிந்துகொள்வோமா வாங்க..

வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட

கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும்:

கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும்

கடிகாரம் கிழக்கு, மேற்கு, வடக்கு போன்ற திசைகளில் உள்ள சுவற்றில் மாட்ட வேண்டும்.

கண்ணாடி எந்த திசையில் வைக்க வேண்டும்:

கண்ணாடி எந்த திசையில் வைக்க வேண்டும்

நம் வீட்டில் கண்ணாடியின் அளவானது சதுரம் அல்லது செவ்வகம் வடிவில் இருக்க வேண்டும். வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது நல்லது. முக்கியமாக நம் வீட்டின் தரைக்கு மேல் 4 அல்லது 5 அடி இடைவெளி கண்ணாடியை வைக்க வேண்டும்.

கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்:

கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்

வீட்டில் வட கிழக்கு திசையில் படுக்கை அறை இருக்க வேண்டும். கட்டில் மற்றும் மெத்தையை தென் மேற்கு மூலையில் போட்டு படுப்பது போல் இருத்தல் வேண்டும்.

பிரிட்ஜ் எந்த திசையில் வைக்க வேண்டும்:

house things direction in tamil 

குளிர் சாதன பெட்டியை சமையலறையின் தென்கிழக்கு, மேற்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

பீரோ எந்த திசையில் வைக்க வேண்டும்:

பீரோ எந்த திசையில் வைக்க வேண்டும்

உங்களுடைய வருமானம் உயர வேண்டும் மற்றும் செல்வம் பெருக வேண்டுமென்றால் குபேரனுக்கு உகந்த திசையான மேற்கு திசையில் பீரோவை  வைக்க வேண்டும்.

இறந்தவர்கள் போட்டோவை எந்த திசையில் வைக்க வேண்டும்:

வீட்டில் இறந்தவர்களின் படத்தை வடக்கு திசையில் மாட்டி தெற்கு திசை பார்த்தவாறு இறந்தவர்களின் படத்தை வைத்து வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

காலண்டர் எந்த திசையில் மாட்ட வேண்டும்:

காலண்டர் எந்த திசையில் மாட்ட வேண்டும்

நாம் தினமும் எழுந்ததும் என்ன நாள் என்று பார்க்கும் காலண்டரை வடக்கு திசையில் வைக்க வேண்டும்.

அடுப்பு எந்த திசையில் வைக்க வேண்டும்:

அடுப்பு எந்த திசையில் வைக்க வேண்டும்

வீட்டில் சமயலறையில் உள்ள அடுப்பு தென் கிழக்கு திசையில் வைத்து சமைக்க வேண்டும். பெரும்பாலான வீட்டில் அடுப்பு வாஸ்து படி தான் வைத்திருப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்