வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

படுக்கை அறை வாஸ்து – கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

Updated On: October 24, 2024 11:14 AM
Follow Us:
Bedroom Vastu Tamil
---Advertisement---
Advertisement

பெட்ரூம் வாஸ்து – Bedroom Vastu Tamil | கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக வாஸ்து சாஸ்திரங்கள் பலவகையான விஷயங்களுக்கு பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் படுக்கை அறை வாஸ்து சாஸ்திரம். மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய படுக்கை அறையானது வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமைந்தால் நிம்மதியான உறக்கம், நல்ல ஆரோக்கியம், தாம்பத்திய வாழ்வில் ஒற்றுமை, கனவுகளற்ற நிம்மதியான உறக்கம்.

போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது போன்ற பல சுவாரஷ்யமான மற்றும் முக்கியமான குறிப்புகள் இருக்கின்றன. ஆக இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க படுக்கை அறை வாஸ்து குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

படுக்கை அறை வாஸ்து:

தம்பதிகள் உறங்குவதற்கு சிறந்த அறை எதுவென்றால் வீட்டின் தென்மேற்கு மூலை அறை அதாவது அதனை நிருதி மூலை தான் தம்பதிகள் உரங்கள் சிறந்த அறை ஆகும்.

அதேபோல் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய அறை எதுவென்றால் வீட்டின் வடகிழக்கு அதாவது ஈசான்ய மூலை மற்றும் தென் கிழக்கு மூலை அதாவது அக்னி மூலை இந்த அறைகளில் தம்பதிகள் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
வாஸ்து படி பூஜை அறை, படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறைகளுக்கான அளவுகள்..!

கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

தென்மேற்கு மூலை அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில் மெத்தை பாய் போட்டு படுப்பது மிகவும் சிறப்பு.

இந்த தென்மேற்கு மூலை அறையில் எந்த இடத்தில் கட்டில் போடவேண்டும் என்பதை இன்னும் நீங்கள் எளிமையாக முறிந்துகொள்ள வேண்டும் என்றால் மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெள்ளை நிறத்தில் உள்ளது அல்லவே. அது தான் கட்டில் போடுவதற்கு சரியான இடம் ஆகும்.

எந்த சுவற்றை ஒட்டி கட்டில் அல்லது படுக்கையை பேட வேண்டும்?

தென்மேற்கு மூலை அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி படுக்கை/ கட்டில் போட வேண்டும். மேல் படத்தில் காட்டியுள்ளது போல் தென்மேற்கு பகுதியில் உள்ள சுவற்றை ஒட்டி கட்டிலை போட்டுக்கொள்ளலாம்.

கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டி படுக்கை/ கட்டில் போன்றவரை போடக்கூடாது. கண்டிப்பாக வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால் நீட்டி படுக்க கூடாது

ஒருவேளை அறைதான் என்றால் அவர்கள் தூங்கும் அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் போன்றவரை போட்டு படுக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எந்த திசையில் கட்டில் போட்டு படுக்கலாம்?

வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீட்டின் வடகிழக்கு மூலையை படுக்கை அறையாக பயன்படுத்தலாம். இது மிகவும் சிறந்த திசையாகும். மற்றபடி எந்த இடத்தில் கட்டில் போட வேண்டும், எந்த சுவற்றை ஒட்டி கட்டில், பாய், மெத்தையை போட வேண்டும், எந்த பக்கம் தலைவைத்து படுக்க வேண்டும் என்பது அனைத்து அறைகளுக்கும் பொதுவானது. ஆக அதையே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அறைக்கும் பின்பற்ற வேண்டும்.

அதேபோல் கன்னி பெண்கள் வீட்டில் இருந்தால் வடமேற்கு மூலையில் உள்ள அறையை படுக்கை அறையாக பயன்படுத்தலாம். மேலும் விருந்தினர்கள் வந்தால் அவர்களும் இந்த அறையை படுக்கை அறையாக உபயோகிக்கலாம். விருந்திரங்கள் தென்கிழக்கு மூலையில் உள்ள அறையையும் படுக்கை அறையாக பயன்படுத்தலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now