வாஸ்துப்படி பெட்ரூமில் இந்த பொருட்களை வைக்காதீங்க

Advertisement

பெட்ரூம் வாஸ்து

எல்லாருக்குமே வீட்டை அழகாக வைத்து அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதனால் ஹால் மற்றும் கிட்சன் என அனைத்திலும் உள்ள பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி அலங்கரிப்பார்கள். அப்படி வைக்கும் பொருட்களை வாஸ்து படி வைப்பீர்கள். அதாவது கடிகாரம், கண்ணாடி போன்றவற்றை வாஸ்து படி தான் வைத்திருப்போம். அது போல நாம் பெட்ரூமில் வைத்திருக்கும் சில பொருட்கள் நமது நிம்மதியை சீர்குலைக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.! ஆமாங்க சில பொருட்கள் வாஸ்துப்படி பெட்ரூமில் வைக்க கூடாதாம் அவை என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பெட்ரூமில் வைக்க கூடாதவை:

பூனை:

பலரும் தங்களின் செல்லப்பிராணிகளை பக்கத்தில் தான் படுத்து வைத்து கொள்கின்றனர். அதில் ஒன்றான பூனையை தங்களின் பக்கத்தில் படுக்க வைப்பதன் மூலம் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும்.

குப்பை:

பெட்ரூமில் குப்பை இல்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாள் முழுவதும் உழைத்து விட்டு ரிலாக்ஸ் செய்யும் இடமாக பெட்ரூம் இருக்கிறது. அதில் குப்பையாக இருந்தால் மன குழப்பம் ஏற்படும்.

காபி கப்:

பெட்ரூம் வாஸ்து

நாம் இரவில் காபி அல்லது பாலோ குடித்து விட்டு அந்த கப்பினை கழுவாமல் அப்படியே வைத்து விடுவோம். பாத்திரங்களை கழுவாமல் அப்ப்டோயே வைப்பதன் மூலம் வறுமையை உண்டாக்கும்.

கண்ணாடி:

நெனெகல் படுத்திருக்கும் இடத்தில் பக்கத்திலோ அல்லது முன்னடியோ கண்ணாடி இருக்க கூடாது. ஏனென்றால் இதன் மூலம் திருமணவாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

பணம்:

பெட்ரூம் வாஸ்து

நீங்கள் தூங்கும் போது படுக்கைக்கு அருகில் பணத்தையோ அல்லது உணவுப் பொருட்களையோ வைக்காதீர்கள். இது எதிர்மறையான எண்ணங்களுக்கு வழிவகுப்பதுடன், லட்சுமி தேவிக்கு அவமரியாதையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வளவு பெரிய கடனும் தீர இந்த பொருளை மட்டும் தானமாக கொடுங்கள் போதும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement