சனி பெயர்ச்சியின் நேரடி சஞ்சாரம்: தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

Advertisement

Before Diwali for Sani Peyarchi Palangal 2023 

பொதுவாக சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் என இத்தகைய கிரகங்கள் ஆனது பெரும்பாலும் மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியினை மாற்றுகிறது. இத்தகைய கிரக பெயர்ச்சியினாலும் ஒரு சிலருக்கு நன்மை மற்றும் தீமை ஆனது நடக்கிறது. இவ்வாறு இதுபோன்ற கிரகங்கள் மாதத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றினாலும் சனி பெயர்ச்சி என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மற்ற பெயர்ச்சியின் தாக்கங்களை விட சனி பெயர்ச்சியின் தாக்கம் என்பது சற்று அதிக அளவில் இருக்கும். அந்த வகையில் தீபாவளிக்கு முன்பாக அதாவது நவம்பர் 4-ஆம் தேதி அன்று சனியின் பிற்போக்கு இயக்கமானது நடைபெறவிருக்கிறது. ஆகவே சனியின் பெயர்ச்சி ஆனது கும்ப ராசிக்கு நேரடியாக தற்போது திரும்பபோகிறது. இத்தகைய மாற்றத்தினால் எந்தந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க..!

சனி பெயர்ச்சி பலன் 2023:

ரிஷப ராசி:

ரிஷப ராசி

சனி பகவானின் இத்தகைய பெயர்ச்சியினால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களும், அதிர்ஷ்டமும் உண்டாகப்போகிறது. அதேபோல் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி ஆனது நிலவும். மேலும் பொருளாதார நிலை ஆனது சிறப்பானதாக இருக்கும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான பலன்கள் வந்து சேரும். மேலும் எடுத்த காரியங்கள் விரைவில் பயன்தரும் விதமாகவும், வெற்றி அளிக்கும் விதமாகவும் முடியும்.

தனுசு ராசி:

தனுசு ராசிதனுசு ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்கள் ஆனது வெற்றி அளிக்கும் காலமாக இருக்கும். உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும், பாராட்டும் கிடைக்கும். மேலும் தற்போது உள்ள நிலையை விட இன்னும் அதிகமாக வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

 

நிதிநிலை சிறப்பானதாக இருப்பதனால் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனது மேலோங்கி காணப்படும். அதேபோல் அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நேரடி பெயர்ச்சியினால் சிறப்பான பலன்கள் ஆனது நடைபெறவிருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றமும், லாபமும் உண்டாகும்.

அதேபோல் இதுநாள் வரையிலும் இழுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நல்ல நிலையில் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு என்பது கிடைப்பதனால் புதிய வாய்ப்புகள் பல வந்து சேரும்.

மிதுன ராசி:

மிதுன ராசிமிதுன ராசிக்கார்களுக்கு சனி பகவானின் ஆசீர்வாதத்தால் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செய்தி வந்து சேரும். உங்களது வாழ்வில் பொருளாதார நிலை முன்பை விட தற்போது அதிகமாக காணப்படும். அதேபோல் கஷ்டங்களும் நீங்கும்.

மேலும் நிதிநிலை சிறப்பாக இருந்தாலும் கூட தேவையற்ற செலவுகள் என்பது காணப்படும். ஆகையால் அதனை மட்டும் தவிர்ப்பது நல்லது. தொழிலை பொறுத்தவரை சாதகமான பலன்களே கிடைக்கும்.

பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள் 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement