துடைப்பம் வாங்க உகந்த நாள் | Best Day to Buy a Broom in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் துடைப்பம் வாங்க உகந்த நாள்/நல்ல நாள் எது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளம். பொதுவாக, நாம் வீட்டில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை வாஸ்து படி, பயன்படுத்தும் முறை, வாங்கும் முறை, வீட்டில் வைக்கும் முறை என்று உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துடைப்பம் மஹாலக்ஷ்மியுடன் தொடர்புடைய பொருள் ஆகும்.
எனவே, வீட்டில் நாம் துடைப்பத்தை பயன்படுத்தும் முறையை வைத்தே வீட்டில் மஹாலக்ஷ்மி கடாக்சம் கிட்டும். எனவே, துடைப்பம் வீட்டின் செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே, துடைப்பத்தை நாம் எப்போது மரியாதை குறைவாக நடத்த கூடாது. அதாவது, துடைப்பத்தை தூக்கி எரிவது, காலில் மிதிப்பது, உதைப்பது போன்ற செயல்களை செய்ய கூடாது. அதுமட்டுமில்லாமல், துடைப்பத்தை நல்ல நாள் பார்த்து வாங்க. துடைப்பத்தை வாங்குவதற்கு என்று உகந்த நாள் இருக்கிறது. அந்நாளில் தான் துடைப்பத்தை வாங்க வேண்டும். ஓகே வாருங்கள், துடைப்பம் வாங்க உகந்த நாள் எது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
Best Day to Buy New Broom in Tamil:
துடைப்பம் வாங்க உகந்த நாளாக செவ்வாய்கிழமை மற்றும் சனிக்கிழமை கருதப்படுகிறது. இந்த நாட்கள் மிகவும் மங்களகரமான நாளாகவும் கூறப்படுகிறது. இந்த நாட்களில் துடைப்பம் வாங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். முக்கியமாக, மஹாலக்ஷ்மியின் அருளும் ஆசியும் கிடைக்கும். முக்கியமாக, பெளர்ணமி முடிந்து தேய்பிறை நாளில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வாங்குவது இன்னும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.வீட்டில் துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்.?
பழைய துடைப்பத்தை என்ன செய்ய வேண்டும்.?
- நாம் பழைய துடைப்பத்தை, எப்போதும் அடுத்தவர் பயன்படுத்த கூடாது. அது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.
- பழைய துடைப்பத்தை பெரும்பாலும் தூக்கி போடுவதை தவிர்த்து விட்டு, அதனை எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.
- வேறு வழியில்லாமல் துடைப்பத்தை குப்பையில் தான் போட வேண்டும் என்று சொல்பவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் தூக்கி போடுங்கள்.
- முக்கியமாக, நீங்கள் தூக்கி போடும் துடைப்பம் அடுத்தவர் கைக்கு போக கூடாது.
- நாம் பயன்படுத்திய துடைப்ப குச்சிகளை பறவைகள் எடுத்துக்கொண்டு கூடி காட்டினால் நாளது என்று சொல்லப்படுகிறது.
துடைப்பத்தை எப்படி பராமரிக்க வேண்டும்.?
- துடைப்பம் மஹாலக்ஷ்மியின் அம்சம் என்பதால், துடைப்பத்தை எப்போதும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக, துடைப்பத்தில் முடி சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும். துடைப்பத்தை காலில் உதைக்க கூடாது.
- சூரிய மறைந்த பிறகு, வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு வீட்டை பெருக்குவதை தவிர்க்க வேண்டும்.
- துடைப்பத்தை தலைகீழாக வைக்க கூடாது. இவ்வாறு வைத்தால் வீட்டில் பிரச்சனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |