திருநள்ளாறு செல்ல உகந்த நாள்

Advertisement

திருநள்ளாறு செல்ல உகந்த நாள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திருநள்ளாறு செல்ல உகந்த நாள் எது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அனைவரும் திருநள்ளாறு சென்று வழிபடுவது வழக்கம். திருநள்ளாறு கோவிலில் உள்ள குளத்தில் நீராடி சனி பகவானை வழிபடுவதன் மூலம் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி நீங்கும் என்பது ஐதீகம். இதனால், தான்  திருநள்ளாறு கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள்.

திருநள்ளாறு கோவில் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Best day to Go to Thirunallar in Tamil:

திருநள்ளாறு செல்ல உகந்த நாள்

 திருநள்ளாறு செல்ல உகந்த நாளாக சனிக்கிழமை இருக்கிறது. ஏனென்றால் சனிக்கிழமைகளில் சனி கிரகத்தின் அதிர்வலைகள் அதிகமாக இருக்கும். எனவே, அந்த நாளில் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று செய்வதன் மூலம் சனி கிரகத்தால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் குறையும்.

இக்கோவிலானது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இங்கு தான் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் தான் இக்கோவிலில் சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனி தொல்லைகள் நீங்கும் அல்லது குறையும்.

திருநாள்ளாறு கோவிலுக்கு சென்று முதலில் நள தீர்த்தத்தில் நீராட வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும். குளித்து முடித்து விட்டு நள தீர்த்தத்தை திரும்பி பார்க்காமல் வர வேண்டும். அடுத்ததாக, தர்பாரண்யேஸ்வரர்  கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

சனிபகவானால் ஏற்பட்ட பிரச்சனை நீங்க இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய “போகமார்த்த பூண்முலையாள்” என்று தொடங்கும் பதிகம் பாட வேண்டும். இந்த பதிகம் “பச்சைப் பதிகம்” என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறது.

யாரெல்லாம் திருநள்ளாறு செல்லலாம்:

ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடலாம். அது போல

சனிபகவானின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் இத்தளத்திற்க்கு சென்று வழிபடலாம்.

எழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வெளிப்டுவதன் மூலம் சனியின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

மேலும் வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனை, திருமண தடை, ஆரோக்கியத்தில் பிரச்சனை, தொழிலில் வளர்ச்சி அடைய போன்றவைகளுக்கு திருநள்ளாறு சென்று வரலாம்.

சனிக்கிழமை சனி ஓரை நேரம்:

சனிக்கிழமை சனி ஓரை நேரம் ஆனது காலை 10 மணி முதல் 11 மணி வரை இருக்கிறது.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சிறப்பு..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement