மனைவியிடம் சாந்தமாக இருக்கும் ஆண் ராசிக்காரர்கள்..! Best Husband Zodiac Signs in Tamil
Best Husband Zodiac Signs in Tamil – ஜாதகத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் இருக்கும், இந்த பன்னிரண்டு ராசிகளுக்கு 27 நட்சத்திரங்கள் இருக்குறது. இந்த 12 ராசிகளில் சில ராசிகளை ஆண் ராசியாகவும், சில ராசிகளை பெண் ராசியாகவும்பிரிக்கப்படுகிறது. இந்த பெண் ராசியில் பிறந்த ஆண்களுக்கு பெண்களின் தன்மை கொஞ்சம் இருக்கும். இதனால் இவர்கள் திருமணம் செய்துகொள்ளும் துணைவியிடம் பிரச்சனை ஏதுவாக இருந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்து கொண்டு மனைவியிடம் அடங்கி போவார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
ரிஷபம்:
ரிஷபம் ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். மனைவியிடம் இவர்கள் அனைத்து விஷயங்களிலும் மிகவும் சகஜமாக இருப்பார்கள். வீட்டில் என்ன சண்டை வந்தாலும் அதனை சுமுகமாக சமாளிக்கும் திறன் இவர்களிடம் இருக்கும். இதன் காரணமாக இவர்கள் மனைவியிடம் மிகவும் பொறுமை சாலியாக இருப்பார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது..! இதில் உங்கள் ராசி இருக்கா
கடகம்:
கடகம் ராசிக்காரர்களை மிகவும் பொறுமைசாலி என்று சொல்லலாம். இவர்களை நீருடன் ஒப்பிடலாம், வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த வீட்டை நல்ல முறையில் வழிநடத்தி செல்வார்கள். இவர்கள் மிகவும் கூல் டைப் என்று சொல்லலாம். இவர்கள் இருக்கும் இடம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். இவர்கள் மனைவி சொல்வதை கேட்டு நடக்கும் குணம் கொணடவர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களை மிகவும் மென்மையான குணம் கொண்டவர்கள் என்று சொல்லலாம். வீட்டில் இருக்கும் அனைவருடனும் விட்டுக்கொடுத்து போகும் தன்மை கொண்டவராக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் மனைவி இவர்களை அடித்தாலும் சரி, திட்டினாலும் சரி இவர்களை அவர்களிடம் சமாதானமாக போய்விடுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசிக்காரர்கள் அவர்கள் மனைவி எவ்வளவு அடித்தாலும் அதனை தாங்கிக்கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தன்மை இவர்களிடம் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்கு இப்படி தான் இருக்குமா?
மகரம்:
இவர்கள் மனைவியிடம் எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆக இவர்கள் மனைவி என்ன செய்தாலும் அதற்கு சம்மதம் சொல்ல கூடியவர். மனைவி கோவப்பட்டாலும் அந்த கோவத்தை குறைக்க கூடிய தன்மை இவர்களிடம் இருக்கும். குறிப்பாக மனைவியை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள்.
மீனம்:
மீனம் ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற திறன் அவர்களுக்கு தெரியும். மனைவியிடம் எப்போதும் மிகவும் பக்குவமாக நடந்துகொள்வார்கள். மனைவியிடம் அதிகம் காதல் உணர்வு கொண்டிருப்பார்கள். இதன் மீனம் ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியிடம் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டார்கள்.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |