வீட்டில் செல்வ செழிப்பு உண்டாக இந்த செடியை வளர்த்து வாருங்கள் போதும்..!

Advertisement

Best Lucky Plants for Home in Tamil

பொதுவாக நம்முடைய வீடுகளில் விளக்கேற்றி, பூஜை செய்து வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஒரு ஐதீகமாக செய்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இவற்றை இல்லாமல் வீட்டிற்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விஷயங்கள் இருக்கிறது. அதாவது வாஸ்துப்படி செடி மற்றும் மரங்களை வளர்த்து வருவதன் மூலமாக வீட்டில் செல்வம் சேரும் என்று கூறப்படுகிறது. அதனால் இன்றைய பதிவில் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் செடிகள் எது என்பதை பார்க்கலாம் வாங்க..!

எந்த பறவை வீட்டிற்குள் கூடு கட்டினால் மிகவும் அதிர்ஷ்டம் தெரியுமா 

அதிர்ஷ்டம் தரும் செடிகள்:

சங்குப்பூ:

சங்குப்பூ

வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் பூக்களில் சங்குப்பூவும் ஒன்றாக இருக்கிறது. ஆகையால் வீட்டில் சங்குப்பூவினை வளர்த்து வருவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்திஷ்டம் இருந்தால் அவை அனைத்தும் நீங்கி வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

கற்றாழை செடி:

கற்றாழை செடி

ஆரோக்கியம் ரீதியாக கற்றாழை செடி பல நன்மைகளை கொண்டிருந்தாலும் கூட ஆன்மீகம் ரீதியாகவும் இவை பலனை வழங்குகிறது. அதாவது இந்த செடியினை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வீட்டின் மீது கண் திருஷ்டி இருந்தால் நீங்கி பண வரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மாதுளை செடி:

மாதுளை செடி

மற்ற செடிகளை வளர்க்கும் ஆர்வத்தினை யாரும் மாதுளை செடியை வளர்ப்பதில் காட்டுவது இல்லை. ஆகவே மாதுளை செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் மஹாலக்ஷ்மியின் அம்சம் கிடைக்கும் என்றும், அதனால் பணக் கஷ்டம் நீங்கி செல்வம் சேரும் என்று கூறப்படுகிறது.

வெற்றிலை கொடி வளர்ப்பு:

வெற்றிலை கொடி

வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் வெற்றிகள் குவியும் என்றும், குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இந்த 5 பொருட்களை மறந்தும் வீட்டில் வைக்காதீர்கள் தீராத பண கஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement