வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan Saranam Bhagavathi Saranam Lyrics in Tamil

Updated On: December 17, 2025 4:10 PM
Follow Us:
bhagavan saranam bhagavathi saranam lyrics in tamil
---Advertisement---
Advertisement

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan Saranam Lyrics in Tamil

ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் பூஜை செய்யும் போது பக்தி பாடல்களை கேட்பார்கள். பக்தி பாடல்களை கேட்பதால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதமே வந்தாலே ஐயப்பன் கடவுளுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். அப்படி 48 நாட்களும் ஐயப்பனுடைய பாடல்களை தான் கேட்பார்கள், பாடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் பகவான் சரணம், பகவதி சரணம் பாடல் வரிகளை  அறிந்து கொள்வோம் வாங்க..

Bhagavan Saranam Bhagavathi Saranam Lyrics in Tamil:

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்

பகவான் சரணம் பகவதி சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா
(பகவான்)
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
(பகவான்)

மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா

பாலபிஷேகம் உனக்கப்பா – இப்
பாலனை கடைகண் பாரப்பா
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காண வந்தோம்

இருமுடிக் கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – இருமுடிக் கட்டு
நெய் அபிஷேகம் – சுவாமிக்கே
சுவாமிக்கே – நெய் அபிஷேகம்
(பகவான்)
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா – உன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா

நெய் அபிஷேகம் உனக்கப்பா – உன்
திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா – மனம் வையப்பா
(பகவான்)
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப் பாதமப்பா
(பகவான்)

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now