பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா பாடல்..!

Advertisement

Bhagyam Than Lakshmi Song Lyrics 

பொதுவாக அனைவருடைய வீடுகளிலும் மற்ற நாட்களை விட செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு என இத்தகைய நாட்களில் தான் அதிகமாக தெய்வ வழிபாடு செய்வார்கள். ஆனால் இத்தகைய முறையில் வழிபாடு செய்தாலும் கூட ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போது அந்தந்த சாமிக்கு உகந்த நாட்களில் தான் செல்வார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தெய்வங்களுக்கு எப்படி வழிபடும் முறை என்பது ஒவ்வொரு கிழமைகளில் இருக்கிறதோ, அதேபோல் ஒவ்வொரு மந்திரம் மற்றும் பாடல் வரிகளும் இருக்கிறது. அந்த வகையில் இன்று பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா பாடல் வரிகளை தான் பார்க்கப்போகிறோம்.

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்

பாக்கியம் தரும் லக்ஷ்மி பாரம்மா பாடல் வரிகள்:

 பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா பாடல்

 

பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
முன்னோர்கள் செய்த
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

என் அன்னையே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க
நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க
உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்ய சுமங்கலி பூஜையின் அழைக்க
மத்தொரு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் அன்னையே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

கனக விருஷமாய் கனமழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெருக
கனக விருஷமாய் கனமழை தருக
மனைகள் எங்கிலும் திரவியம் பெருக

தினகரகோடி உன் மேனியில் உருக
ஜனக ராஜன் திருகண்மணி வருக
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் சேராய்
சங்கநிதி முதல் நவநிதி தாராய்
கங்கண கையால் மங்களம் சேராய்

குங்கும பூவாய் பங்கய பாவாய்
வேங்கடரமணரின் பூங்கொடி வாராய்
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்
அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்
நித்த மஹோத்தமம் நித்திய மங்களம்

சக்திக்கேற்றபடி சாது போஜனம்
சாப்பிட்டு தருவாய் அட்சதை சீதனம்
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் அன்னையே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து
சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த
சுக்கிர வார பூஜையில் இருந்து

அக்கறையோடு சந்தனம் குழைத்து
சாற்றிட புரந்தர விதலனை அழைத்து
பாக்யம்தான் லஷ்மி வாருமம்மா
என் இல்லமே
சௌபாக்யம்தான் லஷ்மி வாருமம்மா…!

சிவபெருமானை வணங்க உதவும் என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement