போகி அன்று எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை கட்டாயம் செய்திடுங்கள்..!

bhogi pongal andru seiya vendiyavai

போகி பண்டிகை என்றால் என்ன

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அது போல நல்ல காரியங்கள் அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு ஆரமிப்பார்கள். அது போல் போகி பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது முன்னோர்களின் வாக்கு. அதனால் இந்த பதிவில் போகி பண்டிகை அன்று செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

போகி எதற்காக கொண்டப்படுகிறது:

bhogi pongal

போகி என்றாலே பழையன கழிதலும், புதியன புகுதலும் என்று சொல்வார்கள். அதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து, இனி வரும் நாட்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால், உண்மையில் போகி பண்டிகை என்றால் நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்பதை தான் உணர்த்துகிறது. இதனால் தான் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதை மனதில் உள்ள தீய எண்ணங்களை அழிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள் ⇒ அதிர்ஷ்ட மழை பொழிய பொங்கல் அன்று இதை செய்திடுங்கள்

 போகியை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இந்திர பகவான் தான். தேவர்களின் அரசனாக தேவர்களின் அரசன் மற்றும் மழையின் கடவுளான இந்திர பகவானுக்காக தான் பாரம்பரியமாக போகி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இது மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளை சுத்தம் செய்து, வண்ணம் பூசி கொண்டாடுவார்கள். இதோடு பழைய ஆடைகள், பழைய பொருட்கள் போன்றவற்றை நீக்குவார்கள்.  

இந்நாளில் வீட்டில் நீர்கோளம் போட்டு, விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல விளைச்சலை தர வேண்டும் என்று வேண்டி கொண்டாடுவார்கள்.

போகி அன்று செய்ய வேண்டியவை:

bhogi pongal

வீட்டில் உள்ள நிலைகள் அனைத்தையும் துடைத்து விட்டு, இரண்டு பக்கமும் நிலையில் மஞ்சள் தூளை குழைத்து மூன்று பட்டை போட்டு நடுவில் குங்குமம் வைக்க வேண்டும்.

வீட்டின் நிலையின் மேலே வெற்றிலை தோரணம், மாவிலை தோரணம், வேப்பிலை தோரணம் ஏதாவது ஒன்றை கட்டி விடவும்.

பச்சரிசியை அரைத்து வீட்டில் மாவு கோலம் போட வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ பொங்கல் அன்று இந்த மூன்று பொருட்களை வாங்கி விடுங்கள் அது உங்கள் வீட்டில் பண வரவை அதிகரிக்கும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்