இந்த பறவை வீட்டிற்குள் வந்தால் அதிர்ஷ்டமாம்.

Advertisement

பறவைகள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்

வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! பறவைகள் தனக்கான உணவை தேடி சாப்பிட்டு தண்ணீர் குடித்து மரங்களில் கூடு காட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பறவைகள் பொதுவாக அனைவருடைய வீட்டிற்குள் தினமும் கண்டிப்பாக வரும். அப்படி பறவை வரும் போது ஆகா இந்த பறவை வந்துவிட்டதே அது நம்முடைய வீட்டிற்குள் வந்தால் நல்லதா இல்லை கெட்டதா என்று பலரும் நினைத்து புலம்புவார்கள். அதனால் வீட்டிற்குள் எந்த பறவை வந்தால் என்ன பலன் அது வீட்டிற்கு வந்தால் நல்லதா.! என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ எறும்பு வீட்டுக்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?| எறும்பு வருவதன் உண்மையான காரணம் பற்றி தெரிந்துகொள்ளலாம்..!

எந்த பறவைகள் வீட்டிற்குள் வந்தால் அதிர்ஷ்டம்:

எந்த எந்த பறவைகள் நம்முடைய வீட்டிற்கு வந்தால் அதிஷ்டம் மற்றும் அதன் பலன் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிட்டுக்குருவி வீட்டிற்கு வந்தால்:

சிட்டுக்குருவி வீட்டிற்குள் வந்தால் வீட்டில் நல்லது நடக்கும். அதுமட்டும் இல்லாமல்  வீட்டில் விரைவில் சுப காரியங்கள் நடப்பதற்கான அறிகுறியாக சிட்டுக்குருவி தோன்றும்.

குறையாத செல்வதை தரக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் நம்முடைய வீட்டிற்கு வரப்போகிறது என்ற ஒரு முக்கிய அறிகுறியாகவும் சிட்டுக்குருவி காணப்படுகிறது.

காகம் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்:

அமாவாசை அன்று சமைத்து காகத்திற்கு சாப்பாடு வைத்த பிறகு தான் அனைவருடைய வீட்டிலும் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் நம்முடைய முன்னோர்கள் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

காகத்திற்கு தினமும் நாம் சாப்பாடு வைத்தால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது ஒரு ஐதீகம்.

அதுபோல சனீஸ்வர பகவானின் வாகனமாகவும் காகம் இருக்கிறது. ஆகையால் காகம் நம்முடைய வீட்டிற்கு வந்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.

புறா வீட்டிற்கு வந்தால்:

புறா ஆரம்ப காலத்தில் தகவல்களை தூது கொண்டு செல்லும் ஒரு பறவையாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் புறாவை சமாதான புறா என்றும் அழைப்பார்கள்.

அத்தகைய புறா நம்முடைய வீட்டிற்கு வந்தால் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.

ஆந்தை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்:

ஆந்தை வீட்டிற்கு வந்தால் நல்லது நடக்காது என்று தான் அதிகமாக நினைப்பார்கள். ஆனால் அப்படி கிடையாது. ஆந்தை வட மாநிலத்தில் மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருக்கிறது. ஆகவே ஆந்தை வீட்டிற்கு வந்தால் மஹாலக்ஷ்மி வருவதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன்:

மயில் முருகப் பெருமானின் வாகனமாக இருக்கிறது. மழை வருவதை முன் கூட்டியே தன்னுடைய நடனத்தால் தெரியப்படுத்தும் ஒரு பறவையாகவும் மயில் காணப்படுகிறது. அத்தகைய மயில் நம்முடைய வீட்டிற்கு வந்தால் நமக்கு வரப்போகும் ஒரு ஆபத்தை தடுக்கும் ஒரு நல்ல பலனாக இருக்கிறது.

கழுகு வீட்டிற்கு வந்தால்:

கழுகு வீட்டிற்கு வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த கழுகு மகாவிஷ்னுவின் வாகனமாக இருக்கிறது. வேதங்கள் அனைத்திற்கும் ஒரு உதாரணமாக கழுகு காணப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட அந்த கழுகு நம்முடைய வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement