உங்கள் ராசிக்கு எந்த உடல் உறுப்பு அழகு தெரியுமா? ஒவ்வொரு ராசிப்படி மற்றவர்களை வசீகரிக்கும் உடல் உறுப்புகள்..

Advertisement

ஒவ்வொரு ராசிப்படி மற்றவர்களை வசீகரிக்கும் உடல் உறுப்புகள்.. 

Body parts Astrology in Tamil – வணக்கம் நண்பர்களே.. உடல் உறுப்பு என்பது நபருக்கு நபர் மாறுபடும். நாம் யார் என்பதை தெரிந்துகொள்ள பெயர் உதவுவது போல். நமது உடல் உறுப்பு தான் நாம் யார் என்பதை உலகுக்கு தெரியப்படுத்துகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு உடல் உறுப்புகள் வசீகர அழகை கொடுக்கும். ஆக ஒவ்வொரு ராசிப்படி மற்றவர்களை வசீகரிக்கும் உடல் உறுப்புகள் எது என்பதை பற்றி தான் நாம் இப்பொழுது படித்தறிய போகிறோம். சரி வாங்க உங்கள் ராசிக்கு எந்த உடல் உறுப்பு வசீகரமானது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்:

Body parts Astrology in Tamil

மேஷம்:

ராசியில் முதலாவதாக இருப்பது மேஷம் ராசி தான். மேஷம் ராசிக்காரர்கள் மற்றவர்களை வசீகரிக்க கூடிய உடல் உறுப்பு உங்களுக்கு எது தெரியுமா? உங்கள் வில்போன்ற புருவம் தான். உங்களுக்கு பிறவியிலேயே புருவம் மிகவும் அழகா இருக்கும். உங்களுடைய புருவம் மற்றவர்களை மிகவும் கவரக்கூடியதாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை கவரும் அளவிற்கு அழகான உதடுகள் இருக்கும். மேலும் அதிக உணர்வு திறன் கொண்டவர்கள் நீங்கள்.

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்களுக்கு அழகாக கருதப்படுவது முகம் தான். உங்கள் முகம் மற்றவர்களை கவரும் அளவரிக்கு மிகவும் அழகா இருக்கும். குறிப்பாக உங்கள் சருமம் மிகவும் இளமையாக தான் இருக்கும்.

கடகம்:

கடகம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை வசீகரிக்க வைக்கும் அளவிற்கு உங்கள் வயிறு மற்றும் மார்பகம் இருக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு அழகான வயிறு மற்றும் கூந்தல் இருக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு அழகாக இருக்கும் உடல் உறுப்பு எது என்றால் அவர்களது தோல் தான். கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவர்களுடைய தோலுக்கு தான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அழகா இருப்பது எது என்றால் பின்புற தோற்றம் தான். இவர்களை பின்புறத்தில் இருந்து பார்கள் மிகவும் வசீகரமாக தோற்றத்தில் காட்சியளிப்பார்கள்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அழகாக கருதப்படுவது இடுப்பு தான். இவர்களுக்கு இடுப்பு மிகவும் அழகாக வசீகரமாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு வசீகரமான உடல் உறுப்பாக கருதப்படுவது முதுகு தான். இவர்களுக்கு முதுகு பகுதி மிகவும் மென்மையானதாகவும் அழகானதாகவும் இருக்கும்.

மகரம்:

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான கால்கள் இருக்கும். பெரும்பாலும் மகரம் ராசிக்காரர்கள் இவர்களுடைய கால்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கும்பம்:

கும்பம் ராசிக்காரர்களுக்கு வசீகரமான உடல் உறுப்பாக இருப்பது அவர்களுடைய கால் பாதம், மூக்கு, பற்கள் தான். இவர்களுடைய இந்த உறுப்புகள் மிகவும் மென்மையாக அழகாக இருக்கும்.

மீனம்:

மீனம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அழகான மற்றும் கவர்ச்சிகரமானம் உடல் உறுப்பு எதுவென்றால் அவர்களுடைய மீன் போன்ற கண்கள் தான். இவர்களின் இமைகளில் இருக்கும் முடிகள் மிகவும் மென்மையாகவும் அடர்த்தியக்காவும் பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement