மனித உடல் அமைப்பு
வணக்கம் ஆன்மிக நண்பர்களே.! ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடல் அமைப்பை கொண்டிருப்பீர்கள். அதாவது சில நபர்கள் ஒல்லியாக இருப்பார்கள், சில நபர்கள் குண்டாக இருப்பார்கள், சில நபர்கள் சரியான உடல் அமைப்பை கொண்டிருப்பார்கள். இப்படி உடல் அமைப்பு உடையவர்களை வைத்து அவர்களின் குணத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
ஒல்லியாக இருப்பவர்கள்:
நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். நீங்கள் செய்யும் வேலைகளில் ஈடுபாடு இல்லையென்றால் அந்த வேலையே செய்ய மாட்டீர்கள். உங்களுடைய வேலையை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் செய்யும் வேலையை யாரும் குறை சொல்ல கூடாது என்று நினைப்பீர்கள். உங்களை எப்படி அக்கறையாக பார்த்து கொள்கிறீர்களோ அதே போல் உங்களின் கூட இருப்பவர்களையும் அக்கறையாகவும், அன்பாகவும் பார்த்து கொள்வீர்கள்.
இதையும் படியுங்கள் ⇒ பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம்.!
குண்டாக இருப்பவர்கள்:
குண்டாக இருப்பவர்கள் அதிகமாக சாப்பிட மாட்டார்கள். இவர்கள் உடல் ரீதியாக உள்ள வேலைகளை செய்ய மாட்டார்கள். அப்படி செய்கின்ற நிலைமை வந்தால் யாரும் செய்ய மாட்டார்களா என்று நினைப்பார்கள். இவர்கள் மற்றவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். இவர்கள் அதிகம் கோவப்படும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். உடற்பயிற்சி அதிகம் செய்வார்கள். படம் பார்த்தால், மொபைல் பயன்படுத்துவது என இதுபோன்ற வேலைகளை செய்து நேரத்தை கழிப்பார்கள்.
பிட்டாக இருப்பவர்கள்:
இவர்கள் ஒல்லியாகவும் இருக்க மாட்டார்கள், குண்டாகவும் இருக்க மாட்டார்கள் சரியான உடல் அமைப்பில் அதாவது பிட்டாக இருப்பார்கள். இவர்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பார்கள். மேலும் திட்டமிட்டு எந்த செயலையும் செய்வார்கள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது அவர்களுடன் பழகியவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று புரிந்து கொள்வார்கள். இவர்கள் தன்னை அழகு படுத்துவதிலும் சரி, ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவை எடுப்பதில் வல்லவராக இருப்பார்கள். உடற்பயிற்சி, தூக்கம் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இதையும் படியுங்கள் ⇒ கையை இப்படி முறுக்கிறீங்களா..! அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |