இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுவயதிலே பெரிய பதவிக்கு செல்லும் அதிர்ஷ்டம் இருக்குமாம்..! இதுல உங்க நட்சத்திரம் இருக்கா..!

Advertisement

Born Under a Lucky Star in Tamil

ஒருவருடைய நட்சத்திரத்தை பொறுத்து தான் அவர்களின் அனைத்து குணங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரதிற்கும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. எனவே ஒருவரின் நட்சத்திரத்தை வைத்து அவருடைய பலம், பலவீனம், திறமை, உடல் அமைப்பு, குணங்கள் போன்ற பலவற்றை அறிந்து கொள்ளலாம். சில நட்சத்திரங்கள் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் இயல்பாகவே அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அளிக்கும். அந்த வகையில் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சிறு வயதிலே பெரிய பதவிக்கு செல்லும் அதிர்ஷ்டம் இருக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஓகே வாருங்கள் அந்த அதிர்ஷ்ட நட்சத்திரம் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உத்திராட நட்சத்திரம்:

உத்திராட நட்சத்திரம்

அதிர்ஷ்டமான நட்சத்திரத்தில் உத்திராடம் நட்சத்திரமும் ஒன்று. இது சாதனை, செழிப்பு மற்றும் உறுதிப்பாடு போன்றவற்றுடன் தொடர்புடைய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தலைமை பொறுப்பில் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் அதற்கான தகுதியை வளர்த்து கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். மேலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆற்றலும் நல்லவர்களின் ஆதரவையும் பெறுவார்கள். இதன் மூலம் அவர்கள் வெற்றிகளை பெறுவார்கள். இவர்களுக்கு கிடைக்கும் வெற்றி எப்போதும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?

ரோகிணி நட்சத்திரம்:

ரோகிணி நட்சத்திரம்

இந்த நட்சத்திரக்காரர்கள் தொழிலின் வளர்ச்சிக்கு சாதகமான ஆற்றலை கொண்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் அனைத்து திறன்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தொடங்கும் தொழில்கள் எப்போதும் வித்தியாசமானதாகவும் விரைவில் வெற்றி அடைவதாகவும் தான் இருக்கும். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செழிப்பு, திறமை, வளர்ச்சி மற்றும் நல்ல படைப்பாற்றல் கொண்டவர்களாக தான் இருப்பார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

பூரட்டாதி:

பூரட்டாதி நட்சத்திரம்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, லட்சியம் மற்றும்க டின உழைப்பு போன்றவற்றில் தொடர்புடைவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் லட்சிய உணர்வுடன் இருப்பார்கள். மேலும், எப்படி வேலை செய்ய வேண்டும், எப்படி வேலை வாங்க வேண்டும் என்ற அறிவு திறன் அவர்களுக்கு பிறவியிலே இருக்கும். எனவே அவர்கள் எப்போதும் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுவார்கள்.

50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம் அதனை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

உத்திர நட்சத்திரம்:

உத்திர நட்சத்திரம்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, படைப்பாற்றல் மற்றும் தாராள மனதுடையவர்களாக இருப்பார்கள். உத்திர நட்சத்திரம் வெற்றி மற்றும் செழிப்பை குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தொடங்கினால் சாதகமாகவே தான் அமையும். வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கும். மேலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்களாகவும் புதிய உத்திகள் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

மிருகசீரிஷ நட்சத்திரம்:

மிருகசீரிஷ நட்சத்திரம்

மிருக சீரிஷம் தொழில் வளர்ச்சிக்கு சிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிசுத்தமான ஆன்மாக்களில் ஒருவராக கருதப்படுவார்கள். இவர்கள் பிறவியிலே நேர்மையும் புத்திசாலித்தனமும் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் எதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் திறமை உடையவர்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் எந்த தொழில் செய்தாலும் பிறரை ஏமாற்றாமல் நேர்மையுடன் செய்வார்கள். அதேநேரத்தில் அத்தொழிலில் வெற்றியையும் பெரும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement