புத்த பூர்ணிமா அன்று செய்ய வேண்டியது

Advertisement

புத்த பூர்ணிமா அன்று செய்ய வேண்டியது

புத்த பூர்ணிமா என்பது புத்த ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புத்த பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்த பூர்ணிமா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாள் புத்தரின் பிறந்தநாள் அல்லது புத்தர் தினம் என்றும் சொல்லப்படுகிறது. புத்த பூர்ணிமா ஆனது இந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ,மேலும் தாய்லாந்து, சீனா, கம்போடியா, நேபாளம், இலங்கை மற்றும் திபெத் உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு பண்டிகையிலும் இந்த செயல்களை செய்யலாம், செய்ய கூடாது என்ற வரைமுறை இருக்கிறது. அது போல நாம் தான் செய்ய வேண்டும். அந்த வகையில் நாளை புத்த பூர்ணிமா நாளை முன்னிட்டு என்ன செயல்கள் செய்யலாம்  என்று அறிந்து கொள்வோம். மேலும் சுப முகூர்த்தம் எப்போதுப என்பதையும் அறிந்து கொள்வோம்.

புத்த பூர்ணிமா பூஜை செய்ய வேண்டியவை:

புத்த பூர்ணிமா அன்று செய்ய வேண்டியது

புத்த பூர்ணிமா அன்று சூரிய உதயத்திற்க்கு பிறகு குளிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாளில் பூஜையின் போது எள் விதைகளை தானம் செய்வது நல்லது. இந்த நாளில் பலரும் விஷ்ணுவை வழிபடுவார்கள்.

இன்றைய நாள் தியானம் செய்வது நல்லது. இதனை செய்வதால் இரத்த ஓட்டம், நினைவாற்றல் போன்றவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் புத்த பூர்ணிமாவுக்கு உரிய மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை உச்சரிக்கலாம்.

புத்த பூர்ணிமா பூஜை செய்ய கூடாதவை:

புத்த பூர்ணிமா ஆன இந்த புனித நாளில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த நாளானது புனித நாளாக இருக்கிறது. ஆகையால் இந்த நாளில் கடவுளை மறக்கடிக்க கூடிய எந்த செயலையும் செய்ய கூடாது.

இந்த நாளில் கோபம், வெறுப்பு போன்றவற்றை மற்றவர்களிடம் காட்ட கூடாது. அதற்கு மாறாக அன்பு, அக்கறையையும் காட்ட வேண்டும்.

புத்த பூர்ணிமாவின் முகூர்த்தம்:

புத்த பூர்ணிமா நாளில், பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 4.18 முதல் 05.01 வரை விழும். அடுத்த முகூர்த்தம் காலை 11:57 மணிக்கு தொடங்கி மதியம் 12.50 மணி வரை தொடரும். வெற்றி தருணம் பிற்பகல் 2.37 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணி வரை தொடரும்.

மே 23ம் தேதி இரவு 11:22 மணி முதல் அதிகாலை 1:02 மணி வரை (மே 24) அம்ருத காலம் தொடங்கும். சர்வர்த்த சித்தி யோகம் மே 23 காலை 9.15 மணி முதல் மே 24 அதிகாலை 5.43 மணி வரை.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement