ரிஷபத்தில் சூரியனும் புதனும் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.! இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.!

Advertisement

சூரியன் புதன் சேர்க்கை பலன்

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்புடையது. எனவே ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் 12 ராசிகளுக்கு பல விதமான மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியன் மற்றும் புதன் கிரக சேர்க்கையால் ஒன்றாக சேர்ந்து ஜூன் 7-ஆம் தேதி அன்று ரிஷபத்தில் நுழைகின்றனர். சூரியனும் புதனும் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் சூரியன் பதவியை வழங்கும் கிரகமாகவும், புதன் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தை அளிக்கும் கிரகமாகவும் கருதப்படுகிறது. எனவே இந்த இரண்டு கிரகங்களும் இணைவதால் சில ராசிகள் அதிஷ்ர்ட பலன்களை பெறப்போகிறது. எனவே புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யார் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

1 வாரம் மட்டும் பொறுத்துக்கோங்க.. அப்பறம் இந்த ராசிக்காரவங்களுக்கு லக்கோ லக் தான்..

புதாதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்:

ரிஷப ராசி:

ரிஷப ராசி

புதாதித்ய ராஜயோகத்தால் இக்காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் லக்ன வீட்டில் ராஜயோகம் உருவாகி வருகிறது. இதனால் ரிஷப ராசிக்காரர்களின் செயல்திறன் உயர்ந்த அளவில் இருக்கும். இதனால் நற்பலன்களை பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பீர்கள்.

கடக ராசி:

கடகம்

புதாதித்ய ராஜயோகம், கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களை அளிக்கிறது. கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும் பொருளாதார சிக்கல்களை நீக்கி சமூகத்தில் கௌரத்தை அதிகரிக்கிறது. கடக ராசிக்காரர்களின் வருமான வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகி இருப்பதால் கடக ராசிகாரர்களுக்கு புதிய வருமான வழிகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இக்காலத்தில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாம்.

ஜூன் மாதம் கண்டிப்பாக இந்த 3 ராசிக்கார்களுக்கு திருமணம் கைகூடும்.  இதுல உங்க ராசி இருக்கானு பாத்து தெரிஞ்சிக்கோங்க..

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

புதாத்திய யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரும் வெற்றியை அளிக்கும் என கருதப்படுகிறது. சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரம் என இரண்டிலும் வெற்றி பெறுவார்கள். ஜூன் 7 முதல் ஜூன் 15 வரை சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. இக்காலத்தில் வியாபாரம் மற்றும் தொழில் செய்வபவர்கள் நற்பலன்களை பெறுவார்கள். வேலையில்லாமல் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement