ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!

Advertisement

Budhaditya Yoga Palangal in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் நவகிரகங்களின் தாக்கம் என்பது அதிக அளவு உள்ளது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனை கிரகங்களின் “ராஜா” என்றும், புதனை “இளவரசன்” என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் சேர்ந்து உள்ளதால் ஏற்பட்டுள்ள புத்தாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த புத்தாதித்ய ராஜயோகத்தின் பலன்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதிலும் குறிப்பாக ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும். ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் மிகுந்த பாதிப்புகள் ஏற்படும். இன்றைய பதிவில் இந்த புத்தாதித்ய ராஜயோகத்தினால் தமது வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை பெற போகும் 3 ராசிக்காரர்களின் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் உங்கள் ராசி உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படி உள்ளது என்றால் உங்களுக்கு எந்தமாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்க இந்த ஒரு பரிஹாரம் மட்டும் போதும்

புத்தாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் 3 ராசிக்காரர்கள்:

ரிஷப ராசி:

ரிஷப ராசி

ரிஷப ராசியில் தான் இந்த புத்தாதித்ய ராஜயோகம் உருவாகின்றது. அதனால் இந்த ராஜயோகத்தால் இந்த ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிக அளவு நன்மைகள் மற்றும் அதிக அளவு நல்ல பலன்கள் நடக்க போகின்றது.

வியாபாரம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அதாவது உங்களின் தொழில் அதிக அளவு லாபம் கிடைக்கும். பணிபுரிவர்களுக்கு பணியில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.

சிம்ம ராசி: 

இந்த புத்தாதித்ய யோகம் சிம்ம ராசியின் வாழ்க்கையில் அதிக அளவு அதிர்ஷ்டம் மற்றும் நற்பலன்களை அளிக்கப்போகின்றது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தாலும் அது நன்மையில் தான் முடியும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் உங்கள் குடும்பத்தை ஏதாவது ஒரு சுபநிகழ்ச்சி நடைபெறும். பணவரவு அதிர்ஷ்டகரமாக இருக்கும்.

36 ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் குரு ராகு சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

கன்னி ராசி:

கன்னி

கன்னி ராசியின் 8 வது வீட்டில் இந்த புத்தாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. அதனால் உங்களுக்கு இதுவரை இருந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்.

மேலும் உங்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய தொழில் அல்லது வியாபாரங்களை துவங்குவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடம் சாதகமாக அமையும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் பணக்கஷ்டம் வரவே வராது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement