துலாமில் பெயர்ச்சியாகும் புதன்..இனிமேல் இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம்தான்..!

Advertisement

Budhan Peyarchi Palangal in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி கடந்த சில மாதங்களாக கிரகங்களின் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு கிரகங்கள் முன்னும் பின்னும் பெயர்ச்சியாகி வக்கிரமாகி, உச்சமாகி வருகின்றன. ஒரே ராசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணைந்து சஞ்சரிக்கின்றன. அதுமட்டுமில்லாமல், குரு ராகு இணைவு, சனி வக்ரம் உள்ளிட்ட பல முக்கியமான கிரகமாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதுபோல் தான் புதன் கிரகம், சுக்கிரன் ஆட்சி செய்யும் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறது. ஏற்கனவே துலாம் ராசியில் சூரியன், கேது மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் இருக்கின்றன. இந்நிலையில் புதனின் இணைப்பு 12 ராசிகளுக்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகளை அளிக்க போகின்றது. அவை எந்தெந்த ராசி அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை எல்லாம் பற்றி விரிவாக காணலாம் வாங்க..

அக்டோபர் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் நீங்க போகுது

புதன் பெயர்ச்சியால் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் 3 ராசிக்காரர்கள்:

அதாவது வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறது. இந்த பெயர்ச்சியால் அதீத நன்மைகளை அளிக்க போகின்ற மூன்று ராசிக்காரர்கள் யார் யார் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை எல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

துலாம் ராசி:

துலாம் ராசி

துலாம் ராசியிலேயே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வந்த கேது இன்னும் சில நாட்களில் பன்னிரண்டாம் இடமான கன்னிக்கு பெயர்ச்சியாக இருக்கிறது. அதற்கு முன்பாகவே துலாம் ராசியில் புதன் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் யோகமான காலமாக அமையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலகட்டத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள், அதனால் சுற்றியிருக்கும் எதிர்மறையான சூழல் அனைத்துமே நேர்மறையாக மாறும். மேலும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து வெளிவருவீர்கள்.

மீனத்தில் நுழையும் ராகுவால் திடீர் பண வரவை பெற போகும் 3 ராசிக்காரர்கள்

கடக ராசி:

கடகம் ராசி

துலாமில் பெயர்ச்சி ஆகும் புதனால் கடக ராசிக்கு மிகவும் சிறப்பான காலமாக அமையும். அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டு, பல தொல்லைகளை அனுபவித்து வரும் கடக ராசிக்கு இந்த பெயர்ச்சி ஓரளவுக்கு நிவாரணம் கொடுப்பது போல அமையும்.

மேலும் இந்த காலகட்டத்தில் கடக ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும், பொருளாதாரம் மேம்படும் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வணிகம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும்.

மகர ராசி:

மகரம்

மகர ராசிக்கு பத்தாம் இடமான துலாம் ராசியில் புதன் சஞ்சரிக்க இருப்பது, வேலை வணிகம் மற்றும் தொழில் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தையும் நன்மைகளையும் அளிக்க போகின்றது.

இதுவரை வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகி வணிகம் சூடு பிடிக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்திகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு கூட பல விதமான பணம் சம்பாதிப்பதற்கு பலவித வாய்ப்புகள் தேடி வரும்.

50 ஆண்டுகளுக்கு பிறகு அகண்ட சாம்ராஜ்ய ராஜயோகம் இனிமேல் இந்த 3 ராசிக்காரர்கள் தான் ராஜா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement