புதன் பெயர்ச்சி 2023
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதில் புதன் ராசிஅடுத்த மாதம் ஜூன் 7-ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். ஜூன் 7 முதல் 24-ம் தேதி வரை வாழ்க்கையில் பல கஷ்டங்களை ஏற்படுத்தும். அதனால் இந்த கால கட்டத்தில் கவனமாக இருக்க கூடிய 3 ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
அடுத்த மாதம் கவனமாக இருக்க கூடிய ராசிகள்:
சனியின் வக்ர பெயர்ச்சி..! ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை தான்..!
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியால் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க போகிறார். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணியில் வெற்றி பெற முடியாது. பணியிடத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகளை சந்நிதிகக்க நேரிடும். உங்களின் துணையுடன் நல்லுறவு நீடிக்க பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தையின் கல்வியினால் கவலைகள் அதிகரிக்கும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட புதன் கிழமையில் விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சியால் நிதிநிலைமையில் பிரச்சனை ஏற்படும். மற்றவர்களிடம் கொடுத்தல் வாங்கல்களில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் மற்றவருக்கு கொடுக்கும் பணத்தால் நஷ்டம் ஏற்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். நீங்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். முக்கியமாக வீட்டில் ஏதவாது பேசும் போது வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.
எப்பேர்ப்பட்ட கடனையும் அடைப்பதற்கு நாளைக்கு மறக்காம உப்பை வச்சு பண்ணிடுங்க..
சிம்மம்:
புதன் பெயர்ச்சியால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது. வியாபாரம் செய்பவர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தவிர்க்க வேண்டும். புதன் பெயர்ச்சி உகந்த காலமாக இல்லை. உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |