Budhan Peyarchi 2023
ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. வருகின்ற தீபாவளிக்கு முன்பு புதன் பெயர்ச்சி நிகழ இருக்கிறது. ஆக புதன் பகவான் சில ராசிகளுக்கு நல்லது செய்ய இருக்கிறார். அந்த சில ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறதா? அப்படினா இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புதன் பெயர்ச்சி 2023:
புதன் பகவான் சமீபத்தில் அதாவது அக்டோபர் 19-ஆம் தேதி அன்று தான் தனுசு ராசிக்கு மாறியுள்ளார். நவம்பர் 6ஆம் தேதி மாலை வரை துலாம் ராசியில் இருக்கிறார். பின்னர் அவர் விருச்சிகத்திற்கு செல்கிறார். பொதுவாக புதன் ஆளும் கிரகம் என்பதால் இந்த நேரத்தில் புதிதாக வீடு கட்டும் யோகம், கார் வாங்கும் யோகம் மற்றும் சொத்து வாங்கும் யோகம் சில ராசிகளுக்கு உள்ளது. நவம்பர் 12 தீபாவளி வருகிறது. இந்த புதன் பெயர்ச்சியோ தீபாவளிக்கு முன்பு வருவதால் சில ராசிகளின் வாழ்க்கையானது பிரசமாக போகிறது. அந்த ராசிகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அட்ரா சக்க சனி பெயர்ச்சியால் 2025 வரை அமோகமான வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்..!
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி மிகவும் பிரகாசமானதாக மாற போகிறது. இந்த நேரத்தில் வியாபாரம் செய்யும் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க கூடும். உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். மகிழ்ச்சி நிரம்பி வழியும். நீங்கள் செய்ய வேண்டும் என்ற நினைத்த காரியங்களை இப்பொழுது செய்தால் நன்மையில் முடியும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியானது மிகவும் சிறப்பானதாக மற்றும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் செய்யும் அனைத்தும் வெற்றியில் முடிவடையும். வாழ்கை துணையால் ஆதாயம் கிடைக்க கூடும். பாதியில் நின்ற பணிகளைத் இப்பொழுது தொடங்குவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
மகரம்:
மகரம் ராசி அன்பர்களே இப்பொழுது உங்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது. தொழிலபதிப்பார்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதமாக அமையும். உங்களுடைய நிதிநிலை வளர்ச்சக்கரமானதாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்கள் கேட்பார்கள்.
கும்பம்:
இந்த நேரத்தில் உங்களுக்கு இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். உங்களுக்கு பணம் வரவும் நன்றாக இருக்கும். முந்தைய நாட்களை விட இப்பொழுது உங்களால் அதிகமாக சேமிக்க முடியும். உத்தியோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையை மாற்ற திட்டமிட்டுள்ளவர்கள் அதில் வெற்றி அடைவீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட கரும்பு சாறு மட்டும் போதுமா.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |