கோகுலாஷ்டமி அன்று வாங்க வேண்டிய பொருள்
நாளை குழந்தைகள் இருக்கும் வீட்டில் கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த நன்னாளில் கிருஷணருக்கு பிடித்த உணவுகளை செய்து அவரை மகிழ்வித்து அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டி கொள்வார்கள். ஆக இப்படிப்பட்ட நன்னாளில் கிருஷ்ணருக்கு ஒரு பொருளை வாங்கி வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டமும் நீங்கி பணவரவு அதிகரிக்குமாம். அவை என்ன பொருள், அதை ஏன் வாங்க வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
கோகுலாஷ்டமி அன்று வாங்க வேண்டிய பொருள்:
நாளை கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு பிடித்த உணவுகளை செய்து வணங்குவோம். நீங்கள் செய்யும் உணவுகளில் விதமான நெய் வேத்தியங்களோடு அவளையும் சேர்த்து படைக்க வேண்டும். அவலை சும்மாவும் படைக்கலாம். இல்லையென்றால் புல்லாங்குழலை எடுத்து கொள்ளவும். அதில் ஓட்டைகள் இருக்கும் அல்லவா, அதன் வழியாக அவலை சேர்த்து புல்லாங்குழல் முழுவதும் நிரப்பி கொள்ளவும். இப்படி செய்து வழிபாடு செய்வதால் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.
அவல் வாங்கி வைப்பதற்கான காரணம்:
கிருஷ்ணர் சிறு வயதில் வீட்டில் இருக்கும் நெய், வெண்ணெய் போன்றவற்றை திருடி சாப்பிடுவாராம். லட்டு மற்றும் பலகாரங்கள் போன்றவற்றை திருடி சாப்பிடுவாராம்.
கிருஷ்ண பகவானுக்கு நெருங்கிய தோழராக குசேலர் இருந்துள்ளார். இவர் தன்னுடைய இளம் வயதிலேயே திருமணம் செய்து ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் சொல்லி கிருஷ்ணா பகவானிடம் உதவி கேட்கலாம் என்று சென்றிருக்கிறார். அப்போது அவருடைய கஷ்டம் எல்லாம் நீங்கி விட்டது. அப்போது அவர் வாங்கி வந்த அவலை மட்டும் கிருஷ்ணா பகவானிடம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்.
கிருஷணா பகவான் குசேலர் வாங்கி வந்த அவலை தன்னுடைய இரு கைகளாலும் எடுத்து சாப்பிட்டார். அதன் பிறகு தான் குசேலர் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தார்.
செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |