Calendar Vastu Direction in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பலவகையான முறைகள் மற்றும் பாரம்பரியங்களை சரியாக பின்பற்றி வந்தார்கள். அப்டி அவர்கள் அனைத்தையும் சரியாக செய்தால் தான் அவர்கள் மிகவும் செல்வச்செழிப்புடனும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய சூழலில் நாம் நமது முன்னோர்கள் பின்பற்றிய ஒரு சில முறைகளை கூட சரியாக பின்பற்றுவது இல்லை என்பது கசப்பான உண்மை. ஆம் நண்பர்களே அதனால் தான் நமது முன்னோர்கள் பின்பற்றிய முறைகளை நாம் இன்றைய சூழலில் சரியாக பின்பற்றினோம் என்றால் நமது வாழ்க்கை சரியாக முன்னேற்ற பாதையில் செல்லும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள நாள்காட்டியை எந்த திசையில் மாட்டினால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
கனவில் வெள்ளம் வந்தால் இதுதான் பலனா
காலண்டர் எந்த திசையில் மாட்ட வேண்டும்:
பொதுவாக நமது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஒவ்வொரு விதமான சக்தி மற்றும் ஆற்றலும் உண்டு. அப்படி தான் நமது வாழ்க்கையில் உள்ள நாட்கள் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை குறித்து காட்டும் நாள்காட்டியை எந்த திசையில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அதில் எந்த மாதிரியான படங்கள் இடம்பெற வேண்டும். அதனை எவ்வாறு பராமரித்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் நமது வீடுகளில் உள்ள நாள்காட்டியில் மிகவும் ஆபாசமான படங்கள் இடப்பெற கூடாது. அதேபோல் பயமுறுத்தும் அல்லது அச்சத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு படமும் நமது காலண்டரில் இடம் பெறக்கூடாது.
அதேபோல் நமது வீடுகளில் உள்ள நாள்காட்டியில் நமது மனதிற்கு அமைதியை அளிக்கக்கூடிய படங்கள் இருப்பது மிக மிக நல்லது. அடுத்து நமது வீடுகளில் உள்ள நாள்காட்டியை மிகவும் சுத்தமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும்.
நமது வீடுகளில் உள்ள நாள்காட்டியை பொதுவாக நமது வீட்டின் மேற்கு திசை சுவற்றில் மாட்டி கிழக்கு திசையை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். அதேபோல் நமது வீட்டில் செல்வம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது என்றால்,
அப்பொழுது நமது வீட்டில் உள்ள நாள்காட்டியை தெற்கு திசை சுவற்றில் மாட்டி வடக்கு திசையை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். இதன் மூலம் பல நல்ல பலன்களை நாம் பெற முடியும்.
கடிகாரத்தை இந்த திசையில் மட்டும் மறந்தும் மாட்டிடாதீங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |