ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா..?
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா.? செய்யக்கூடாதா.? என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க. ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை என்பது ஏற்பட்டு கொண்டே இருக்கும். ராகு தோஷம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் எண்ணங்கள், விருப்பங்கள், செயல்பாடுகள் என அனைத்திலும் ஒழுங்கான நிலைப்பாடு இல்லாமல் மாற்றம் ஏற்படுத்தி கொண்டே இருக்கக்கூடியது ஆகும்.
குடும்பத்தை அமைத்து கொடுக்கக்கூடிய பாகங்களான 1, 2,5,7 மற்றும் 8 – ஆம் ஆகிய இடத்தில் உள்ள ராகுவும் கேதுவும் அமைவது தான் ராகு கேது தோஷம் என்று கூறப்படுகிறது. இதில் 1 என்பது லக்னம், 2 என்பது குடும்ப ஸ்தானம், 5 என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், 7 என்பது களஸ்திர ஸ்தானம் மற்றும் 8 என்பது ஆயுள் ஸ்தானம் ஆகும். இந்த இடங்களில் ராகு கேது அமைவதால் எண்ணங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
ராகு கேது பரிகாரம் செய்ய உகந்த நாள் எது.?
Can a Girl With Rahu Ketu Dosham Marry a Boy Without Rahu Ketu Dosham in Tamil:
ராகு கேது தோஷம் உள்ளவர்களின் எண்ணங்கள், செயல்பாடுகள் அனைத்தும் வேறு விதமாக அதாவது, ஒரு நிலையான போக்கில் இல்லாமல் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவர்களின் பேச்சு பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். நல்லது எது கெட்டது எது என்று அறியாமல் இவர்கள் செய்யக்கூடிய காரியங்கள் பெரும்பாலான நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
மற்றவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இந்த தோஷம் இருப்பவர்கள் கஷ்டத்திலும் சொகுசா இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள். எந்த சூழ்நிலையிலும் என் ஆசை என் விருப்பம் என்று இருக்கக்கூடியவர்கள். ஆனால் சுத்த ஜாதகம் இருப்பவர்கள், ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு அப்படியே எதிர்மறையான எண்ணங்களையும் குணங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் எண்ணத்தில் எப்போதும் ஒரு நிலையான எண்ணத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் ஜாதகம் உள்ளவர்கள் ராகு கேது உள்ளவர்களை திருமணம் செய்யும்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் என ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும்.
இந்நிலை தொடர்ந்தால் இறுதியில் இருவருக்கும் இடையில் பிரிவு என்பது தான் ஏற்படும். இதனால் தான் பெரியவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்களை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். இப்படி திருமணம் செய்து கொண்டால் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருக்கும். அப்படியே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் எளிதில் தீர்ந்து விடும்.
இதன்படி பார்த்தல் சுத்த ஜாதகம் உள்ளவர்கள் ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்ய கூடாது. . ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ராகு கேது தோஷம் உள்ளவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும்.
ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |