அஷ்டமி அன்று பொங்கல் வைக்கலாமா..! வைக்க கூடாதா..!

Advertisement

அஷ்டமி 

பொதுவாக நாம் ஒரு நல்ல செயலை செய்யப்போகிறோம் என்றால் அதற்கு நல்ல நேரம் என்று பார்ப்போம். அதிலும் வீட்டில் எதாவது சாமி கும்பிட போகிறோம் என்றால் அந்த நேரத்தில் அஷ்டமி, நவமி இருக்கிறதா மற்றும் ராகுகாலம், எமகண்டம், குளிகை இதுபோன்ற நேரங்கள் இருக்கிறதா என்று நன்றாக அலசி ஆராய்ந்த பிறகு தான் நாம் எந்த ஒரு நல்ல செயலையும் செய்வோம். ஆனால் இதில் என்னவென்றால் வருடத்திற்கு ஒரு முறை வரக்கூடிய தைப்பொங்கலன்று அதாவது தை மாதம் 1- ஆம் தேதி அஷ்டமி வருகிறது. அதனால் அந்த அஷ்டமி அன்று பொங்கல் வைக்கலாம்…! வைக்க கூடாதா…! மற்றும் ஒருவேளை அப்படி பொங்கல் வைத்தால் எந்த நேரத்தில் வைப்பது என்பது பலருடைய சந்தேகமாக இருக்கிறது. உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!

அஷ்டமி அன்று பொங்கல் வைக்கலாமா..! வைக்க கூடாதா..!

 பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொதுவாக அஷ்டமி அன்று செய்யக்கூடிய எந்த ஒரு செயலும் தொட்டால் துவங்காது என்பது பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அந்த அஷ்டமியில் இதுவரை யாரும் நான் ஒரு நல்ல செயலை செய்து இருக்கிறேன் என்று கூறியதும் இல்லை.

அதேபோல அஷ்டமி அன்று ஒரு புதுத்துணி வாங்க வேண்டும் என்றால் கூட யோசிப்பார்கள்.

 இப்படி இருக்கும் போது தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லும் பொங்கலன்று அஷ்டமி வருகிறது. அத்தகைய அஷ்டமியில் எந்த செயலையும் செய்ய யோசிக்கும் போது அன்று பொங்கல் மட்டும் வைக்கலாமா என்று கேட்டால்..? 

அஷ்டமி என்பது காலபைரவருக்கு உகந்த நாளாக இருக்கிறது. அந்த நாளில் காலபைரவருக்கு மட்டும் உகந்த நாளாக இருக்க வேண்டும் என்பதால் அன்று மனிதர்கள் யாரும் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பதற்காக ஆன்மீகத்தில் அப்படி சொல்லப்படுகிறது.

அதனால் வருகின்றன  தை மாதம் 1-ம் தேதி அஷ்டமியாக இருந்தாலும் நீங்கள் அன்று கட்டாயமாக பொங்கல் வைக்கலாம். ஆனால் அப்படி பொங்கல் வைக்கும் போது நல்ல நேரம் பார்த்து வைத்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.

நீங்கள் பொங்கல் வைப்பதற்கு முன்பு ராகுகாலம், எமகண்டம் மற்றும் குளிகை இது போன்ற நேரங்கள் எதுவும் இல்லாமல் நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைத்து இறக்கி மகிழ்ச்சியாக இந்த பொங்கலை கொண்டாடுங்கள்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்:

காலை   07:30 AM to 08:30 AM 
அதன் பிறகு  10:30 AM to 11:30 AM 

 

மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் 2023

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement