அசைவம் சாப்பிட்டு விட்டு வீட்டில் பூஜைகள் செய்யலாமா..?

Advertisement

Can We Eat Non Veg After Pooja in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவு அனைவருக்கும் இருக்கும் கேள்விக்கான பதிலகத்தான் இருக்கும். அதாவது பலபேருக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால் அசைவம் சாப்பிட்டு விட்டு பூஜைகள் செய்யலாமா.? அசைவம் சாப்பிடமால் சமைத்து மட்டும் விட்டு பூஜைகள் செய்யலாமா.? போன்ற அதிகமான கேள்விகள் இருக்கின்றன. நம் ஞான பெரியோர்கள் பொதுவாகவே அசைவம் சாப்பிட கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.? ஆனால் அசைவத்தில் நம் உடலுக்கு தேவையான புரோட்டீன்கள் அதிகமாக இருக்கின்றன என்று அதை விரும்பி சாப்பிடுகிறோம். இப்படி இருக்கையில், நாம் அசைவம் சாப்பிட்டு விட்டு பூஜைகள் செய்வது சரியா.? தவறா.? என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா..?

Can We Eat Non Veg After Pooja in Tamil

அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்று நம் ஞான பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் திருவள்ளுவர் அசைவத்தை தவிர்க்க ஒரு குரலே எழுதி உள்ளார். அசைவ உணவை தவிர்த்தால் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நம்மை கை கூப்பி வணங்கும் என்று கூறியுள்ளார்.

ஒரு உயிரை கொன்று நம் உடலை வளர்ப்பதில் எந்த பயனும் இல்லை. அது பாவத்துக்கு இணையானது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அசைவத்தை தவிர்க்க முடியாத சில அசைவ பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 அப்படி அசைவத்தை சாப்பிட்டு விட்டு பூஜைகள் செய்யலாமா..? என்றால் அசைவம் சாப்பிட்டு விட்டு பூஜைகள் செய்ய கூடாது என்பதே இதற்கான பதில்.  ஏனென்றால் ஒரு உயிரை கொன்று விட்டு நாம் பூஜைகள் செய்தால் அதற்கான எந்த பயனும் கிடைக்காது. அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிட்டு  நம் வயிற்றில் அந்த அசைவம் இருக்கும் போது கடவுளை பிராத்தனை செய்வது என்பது தவறானது. இது பாவத்திற்கு சமமாக கருதப்படுகிறது. 

எங்கோ ஒரு இடத்தில் நமக்கு தெரியாமல் ஒரு உயிர் கொல்லப்பட்டு அதை நாம் வாங்கி வந்து சாப்பிடுவதனால் நாம் அதனை பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் நாமே ஒரு உயிரை கொன்று சாப்பிட வேண்டும் என்ற நிலை வந்தால் எவருமே அசைவம் சாப்பிட மாட்டார்கள்.

 எனவே அசைவம் சாப்பிட்ட பிறகோ அல்லது அசைவம் சமைத்த பிறகோ வீட்டில் பூஜைகள் செய்ய கூடாது மற்றும் ருத்ராட்சம் அணிய கூடாது. பூஜை அறையில் உள்ள சாளக்கிராமம் கல் வெறும் கல் மட்டும் கிடையாது. அதில் ஸ்ரீமன் நாராயணனே எழுந்தருளி இருக்கிறார். அப்படி இருக்கையில் அசைவத்தை தொட்டு விட்டு தெய்வத்தை தொட்டு பூஜைகள் செய்வது என்பது மிகவும் தவறானது. 

எனவே அசைவம் செய்யும் அன்று பூஜைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள சில விஷயங்களை விதம் மாறாமல் பின்பற்றுவதே நல்லது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement