மாசி மாதம் திருமணம் செய்யலாமா | Things To Do in The Month of Masi in Tamil
மாசி மாதம் என்றால் நியாபகத்திற்கு வருவது மாசி மகம் தான். மாசி மாதம் என்றால் அதற்கு தனி சிறப்பு உள்ளது. மேலும் சிலருக்கு நிறைய கேள்விகள் உள்ளது. என்னவென்றால் மாசி மாதம் குடிபோகலாமா, திருமணம் செய்யலாமா.? என்று கேள்விகள் வரும். இந்த மாசி மாதத்தில் வரும் ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பார்கள். இன்னும் நிறைய சிறப்புகள் உள்ளது அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளுங்கள்..!
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புக்குரியது. அம்மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்யக்கூடாது என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆகையால், இந்த பதிவின் வாயிலாக மாசி மாதம் என்ன செய்யலாம் என்பதை கொடுத்துள்ளோம்.
மாசி மாதம் திருமணம் செய்யலாமா..?

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் திருணம் செய்யலாம்.
மாசி மாதம் வீடு குடி போகலாமா..?
மாசி மாதம் வீடு கட்டி குடி போகக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதேபோல் ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மற்றும் பங்குனி மாதங்களில், வீடு கட்டி கிரகப்பிரவேசம் அல்லது கட்டிய வீட்டை புதிதாக வாங்கி கிரகப்பிரவேசம் என்று செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மாசி மாதம் வரும் விசேஷ நாட்கள்:
- பிப்ரவரி 16 – மாசி 04 – ஏகாதசி
- பிப்ரவரி 18 – மாசி 06 – மகா சிவராத்திரி
- பிப்ரவரி 20 – மாசி 08 – அமாவாசை
- பிப்ரவரி 26 – மாசி 14 – கிருத்திகை
- மார்ச் 03 – மாசி 19 – ஏகாதசி
- மார்ச் 04 – மாசி 20 – சனி மகா பிரதோஷம்
- மார்ச் 06 – மாசி 22 – மாசி மகம்
- மார்ச் 07 – மாசி 23 – பெளர்ணமி
- மார்ச் 10 – மாசி 26 – மகா சங்கடஹர சதுர்த்தி
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மாசி மாத சிறப்புகள்
மாசி பௌர்ணமி:
இந்த ஆண்டு மாசி 29 ஆம் தேதி அன்று பௌர்ணமி வருகிறது. இந்த தினத்தில் கடவுளை வழிபாடு செய்தால் நமக்கு நன்மை உண்டாகும்.
மாசி மகம்:
இந்த மாசி மகம் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாப்படுகிறது. இந்த நாளில் மக்கள் கடல் ஆறு, நதியில் நீராடுவார்கள். ஆகவே மாசி மகம் வரும் மாசி 28 (மார்ச் 12) அன்று வருகிறது. அன்றைய தினம் இறைவனை தரிசித்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
மாசி அமாவாசை:
நம்முடைய முன்னோருக்கு வழிபாடு செய்யும் நாட்களில் மாசி அமாவாசை ஒன்று. அதிலும் மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆகவே இந்த வருடம் மாசி 15 ஆம் தேதி வருகிறது. ஆகவே அன்றைய தினம் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














