Can You Get Married On Your Birthday in Tamil
திருமணம் என்றால் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். ஆனால் பெரியவர்கள் அடிக்கடி சொல்வதில் இதுவும் ஒன்று. வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள். ஏனென்றால், அது அந்த அளவிற்கு புனிதமான ஒன்று ஆகும். மேலும் கல்யாணம் என்று பேச்சு எடுப்பதற்கு முன்பு முதலில் ஜாதகம் பார்த்து இந்த வருடம் கல்யாணம் செய்யலாமா அல்லது எந்த திசையில் பெண் அமையும், மாப்பிளை அமையும் என்று ஆயிரம் தடவை ஒன்றுக்கு 3 ஜோதிடர்களை பார்த்து தெரிந்துகொள்வார்கள்.
ஆனால் அனைத்தையும் தெரிந்து கொண்ட பெரியவர்களுக்கு பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா என்ற ஒரு குழப்பம் உள்ளது. ஆகவே இந்த பதிவின் மூலம் பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா..? பிறந்த தேதியில் திருமணம் செய்யலாமா என்ற முழு தகவலையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா..?
பிறந்த நாள் அல்லாத வேறு நாளில் திருமணத்தை நடத்தலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.
பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா..?
பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாம். அதேபோல் அந்த மாதத்தில் வரும் சுபநாளில் திருமணம் செய்வது மிகவும் முக்கியமானது.
பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா..?
ஆண்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று திருமணம் செய்யக்கூடாது. ஆனால் பெண்கள் ஜென்ம நட்சத்திரத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 முக்கிய திருமண பொருத்தம்..!
ஒரே ராசி ஒரே நட்சத்திரம் திருமணம் செய்யலாமா.?
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே ராசியாக இருப்பது தான் ஏக ராசி என்பார்கள். இருவரும் ஒரே நட்சத்திரம் என்றால் இருவருக்கும் இடையே ஒற்றுமை மற்றும் புரிதல் உணர்வுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில், ஏன் ஒரு நட்சத்திரத்தில் உள்ளவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா..?
ஏனென்றால் திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது ஆகும். அதேபோல் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கவேண்டும். ஆனால் ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் பிறந்த இருவரும் திருமணம் செய்துகொண்டால் தசா புத்தியானது ஒரே மாதிரியாக செயல்படும்.
ஆதாவது குடும்பத்தில் வரவு என்றால் ஒரே மாதிரியாக இருக்கும். செலவு என்றாலும் ஒரே மாதிரியாக இருக்கும். அதேபோல் ஏழரை காலத்தில் சனியாது ஒரே வீட்டில் இருவருக்கும் வந்தால் கஷ்டம் அதிகமாக இருக்கும். ஆகவே தான் ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யக்கூடாது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉👉 எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாமா.?
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். இருப்பினும் கோச்சார பலன்கள் யாவும் இருவருக்கும் ஒரே மாதிரியாக, அதாவது நன்மை என்றாலும் தீமை என்றாலும் இருமடங்கு உண்டாகும். ஆகவே அதிகபட்சம் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 🎉👉👉 ஒரே லக்னத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |