Capricorn என்பது என்ன ராசி தெரியுமா..? இந்த ராசியின் வாழ்க்கை இப்படி தான் இருக்குமா..?

Advertisement

Capricorn in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் Capricorn in Tamil பற்றி தான் பார்க்கப்போகின்றோம். Capricorn என்பது ஒரு ராசியின் ஆங்கில சொல்லாகும். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் 12 ராசிகளில் 10 ஆவது ராசி தான் மகரம். ஆகவே Capricorn என்பது மகர ராசி ஆகும். நம்மில் பலருக்கும் மகர ராசி இருக்கும். எனவே இந்த பதிவின் வாயிலாக மகர ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர்களின் குணங்கள் என்ன என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..!

மகர ராசிக்கு ஏழரை சனி எப்போது முடியும்

மகர ராசி குணங்கள்:

magara rasi

ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் 12 ராசிகளில் 10 ஆவது ராசியாக இருப்பது மகர ராசி தான். மகர ராசிக்கு அவிட்டம், திருவோணம், உத்திராடம் என்று மூன்று நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. சனி மற்றும் சுக்ரனின் பார்வை மகர ராசிக்கு உண்டு. சரி இப்போது இந்த ராசிக்காரர்களின் குண நலன்களை காண்போம்.

  • மகர ராசிக்காரர்களின் கைகள் பரந்து காணப்படும்.
  • இவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இரக்க சுபாவம் கொண்டவராக இருப்பார்கள்.
  • அதிகளவு உணர்ச்சிவசப்படுவார்கள்.
  • அதிகம் பயப்படுபவராக இருப்பார்கள்.
  • மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து அதற்கேற்ப செயல்படுபவர்கள்.
  • அதிக தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பர்.
  • சிறிய விஷயத்தையும் பெரிதாக எடுத்து கவலைப்படுவார்கள்.
  • செலவை குறைத்துக் கொள்வார்கள்.
  • அதிகம் யாரிடமும் பேசமாட்டார். ஆனால் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள்.
  • மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், பெரியவர்களை மதிப்பதிலும் இவர்களுக்கு நிகரே இல்லை.
  • தன்னையும், தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.
  • இவரது பாதை நல்ல பாதையாகவே இருக்கும்.

தொழில் மற்றும் வேலை: 

மகர ராசியில் பிறந்தவர்கள் நல்ல கலைஞராக இருப்பார்கள். இவர்கள் எழுத்தாளர், சேவகர், கதையாசிரியர் போன்ற துறைகளில் சிறப்பான பெயர் பெறுவார்கள். இவர்களின் ஜாதகப்படி இவர்களது புகழ் ஸ்தானம் அமையும்.

இவர்களது ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருப்பதால் நல்ல வாழ்க்கை அமையும். தனது திறமையை வெளிப்படுத்த நினைப்பார்கள். அதிகம் உழைப்பவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவார்கள்.

மகர ராசி – சொத்து: 

capricorn

மகர ராசியில் பிறந்தவர்கள் தனது திறமையால் தனது லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவராக இருப்பார்கள். எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். மற்றவர்களுக்கு தர்மம் செய்ய அஞ்சமாட்டார்கள்.

இவர்களது செலவை குறைக்க முடியாது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே பாதி நேரம் செலவழியும். சாதாரண பண நடமாட்டம் இருக்கும். மற்றவர்களின் சொத்திற்கு ஆசைப்பட மாட்டார்கள். தன் கடின உழைப்பால் சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் வாழ்க்கை பலன்கள் எப்படி இருக்கும்

மகர ராசி – காதல் மற்றும் திருமண வாழ்க்கை: 

காதல் வாழ்க்கை: இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசியில் பிறந்தவர்கள் யாரையும் எளிதில் நம்பிவிடுவர். மகர ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது. காதலில் வெற்றியும் அடைவார்கள். மகர ராசிக்காரர்களின் திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும்.

திருமண வாழ்க்கை: மகர ராசியில் பிறந்தவர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையானதொரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். ஆகவே மகர ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

மகர ராசி – குடும்ப வாழ்க்கை: 

மகர ராசி அதிர்ஷ்ட நிறம்

தனது குடும்பத்திற்காக அதிகம் உழைப்பவர்கள் தான் மகர ராசிக்காரர்கள். ஏராளமான கஷ்டங்களையும் தன் குடும்பத்திற்காக அனுபவிப்பார்கள். ஆனால் தங்களது எந்த கஷ்டத்தையும் குடும்பத்தினரிடம் சொல்லாமல், அவர்களுடன் இனிமையாக பழகுவார்கள். தர்மம், சமுதாய சேவைகளில் அதிக நாட்டம் இருக்கும். குடும்பத்தினர் அனைவரும் இவர் பின்னே செல்வர். கருணை மற்றும் தாராள குணம் கொண்டவராக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வார்கள்.

மகர ராசி – படிப்பு

மகர ராசியில் பிறந்தவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார்கள். இவர்களது அறிவு அபரிமிதமாக இருக்கும். இதனால் இவர்களுக்கு படிப்பது என்பது பிடித்த விஷயமாக இருக்கும். சாஸ்திரம், வழக்கறிஞர், விஞ்ஞானம், சங்கீதம் போன்ற படிப்புகளை படிக்கலாம்.

மகர ராசிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவை 
அதிர்ஷ்ட நிறம்  கருப்பு, நீலம் நிறங்கள் அதிர்ஷ்டம் கொடுக்கும்.
அதிர்ஷ்ட கல்   நீலக்கலர் கல் அதிர்ஷ்டமாகும். இதனை தங்கத்தில் பதித்து மோதிரமாக அணியலாம்.
அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 8 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும்.
அதிர்ஷ்ட கிழமை  சனி கிழமை 
வணங்க வேண்டிய தெய்வம்  பைரவர்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement