சைத்ரா நவராத்திரி 2024 எப்போது.?

Advertisement

Chaitra Navratri 2024 Date in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Chaitra Navratri 2024 Date in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க. நவராத்திரி என்பது துர்க்கை அம்மனுக்கு உகந்தது ஆகும். ஒரு வருடத்தில் முதலாவதாக, வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுவதே சைத்ர நவராத்திரியாகும். சைத்ர நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்க்கையின் ஒன்பது வடிவங்களை நாம் வழிபட வேண்டும். ஒரு வருடத்தில் மொத்தம் நான்கு விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சைத்ரா நவராத்திரியை வசந்த நவராத்திரி என்றும் அழைப்பார்கள். நவராத்திரி அன்று துர்க்கை அம்மனின் 9 வடிவங்களை ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டும். இந்த பங்குனி மாதத்தில் வரும் சைத்ர நவராத்திரி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நவராத்திரி நிறைவடையும் நாளில் தான் இந்து புத்தாண்டு துவங்கும். அதனால், இந்த நவராத்திரி புதிய ஆண்டை வரவேற்கும் நாளாவும் கொண்டாடப்படுகிறது. எனவே, இப்பதிவின் வாயிலாக சைத்ரா நவராத்திரி தேதி மற்றும் நேரம் 2024 பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சைத்ரா நவராத்திரி தேதி மற்றும் நேரம்:

Chaitra Navratri 2024 Date in Tamil

சந்திர நாட்காட்டியின்படி, சைத்ர மாதத்தில் வரும் நவராத்திரி சைத்திர நவராத்திரி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 09 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் ஒன்பதாவது நாள் தான் ஸ்ரீராம நவமியாக கொண்டாடப்படுகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் ராம நவராத்திரி என்றும் கொண்டாடுவது உண்டு.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகைக்கு விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகளும் மகிழ்ச்சியும் வந்து சேரும்.

நவராத்திரி காலத்தில் என்ன செய்ய கூடாது.?

  • நவராத்திரி காலத்தில் என்ன செய்ய கூடாது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
  • புதிய சொத்துக்கள், வீடுகள் போன்றவற்றை வாங்குதல் கூடாது.
  • சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.
  • அசைவம், வெங்காயம், பூண்டு உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • புதிய தொழில்களை தொடங்குவது கூடாது.
  • சூரிய அஸ்தமனத்திற்கு முன் விரதத்தை நிறைவு செய்ய கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement