சந்திரன் பெயர்ச்சி
பொதுவாக ஜோதிடத்தில் கிரங்கங்கள் அனைத்தும் தங்களின் ராசியை மாற்றி கொண்டே இருக்கும். இந்த ராசியை மாற்றுவதால் நன்மைகளும் இருக்கும், தீமைகளும் இருக்கும். இவை பெயர்ச்சியை பொறுத்து மாறுபடுகிறது. ஒன்பது கிரகங்களில் ராசிகள் மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவதற்கு உதவியாக இருப்பது சந்திரன் தான். இரண்டரை நாட்களுக்குப் பிறகு சந்திரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறது. இதனால் 12 ராசிகளுக்கும் நன்மை மற்றும் தீமைகளை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கும்பம்:
சந்திர பெயர்ச்சி ஆனது கும்ப ராசிகளுக்கு பல விதங்களில் நன்மைகளை வழங்க போகிறது. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் இந்த காலம் உங்களுக்கு வளர்ச்சியை அள்ளி கொடுக்கும். அதுவே அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்களின் தன்னம்பிக்கை ஆனது அதிகமாக காணப்படும்.
குரு பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடம் வரை அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகும் ராசிகள்.!
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் பெயர்ச்சியானது நன்மைகளை அள்ளி வழங்க போகிறது. கன்னி ராசியில் உள்ளவர்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு திருமணம் கைக்கூடி வரும். வீட்டிற்கு சுப நிகழ்ச்சிகள் வர கூடிய வாய்ப்பு இருக்கிறது. பணியிடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பீர்கள். மேலு பணியில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உள்ள சக பணியாளர்கள் உங்களை மதிப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் உள்ள உறவானது ஆரோக்கியமாக காணப்படும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறைவும் இருக்காது.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சந்திர பெயர்ச்சியானது பல மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் இந்த மாற்றங்களானது நன்மையை மட்டுமே கொடுக்க கூடியதாக இருக்கும். அதனால் எந்த கவலையும் வேண்டாம். உங்களின் வாழ்க்கை துணையிடம் இதுவரை ஏதும் பிரச்சனைகள் இருந்து அதனால் உங்களது உறவானது ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தால் இந்த பெயர்ச்சியினால் உங்களது உறவு பலப்படும். சொந்தமாக தொழில் செய்ய கூடியவராக இருந்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்க கூடிய வகையில் இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களது வேலைகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் நற்பெயர் கிடைக்கும். இதனால் உங்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயரவும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை கேட்டு வாங்கி தருவீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |