சந்திர கிரகணம் 2024 எப்போது.? இந்தியாவில் தெரியுமா.?

Advertisement

Chandra Grahan 2024 in India Date and Time Tamil | சந்திர கிரகணம் 2024 எப்போது.? 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது நிகழப்போகிறது என்றும், அது இந்தியாவில் தெரியுமா.? என்பதையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் இவை இரண்டும் மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்வாகும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் நிகழ உள்ளது.

அறிவியல் முறைப்படி, கிரகணம் என்பது ஒரு சாதாரண கிரக சேர்க்கை என்று கூறப்படுகிறது. அதுவே, ஜோதிடத்தின்படி பார்த்தால், பல மோசமான தாக்கங்களை அளிக்கக்கூடியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த் ஆண்டு நிகழும் இரண்டாவது சந்திர கிரகணம் எப்போது வருகிறது.? என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

சந்திர கிரகணம் என்றால் என்ன.?

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, அதன் நிழல் சந்திரனை மறைக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திரன் பூமியின் குடைக்குள் நுழையும்போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இப்படி நிகழும்போது, சந்திரனின் ஒரு பகுதி பூமியின் குடையில் உள்ளது. மற்ற பகுதி  பூமியின் பெனும்பிராவில் உள்ளது. அதுவே, சந்திரன் பூமியின் குடைக்குள் பாதியளவு ஊடுருவும்போது பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம் 2024 தேதி மற்றும் நேரம்:

இந்த ஆண்டு 2024 சந்திர கிரகணம் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று நிகழ உள்ளது. இந்தியா நேரத்தின்படி, காலை 06:11 AM மணிக்கு நிகழ தொடங்கி 10:17 AM மணி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. அதாவது, இந்த சந்திர கிரகணம் தொடர்ந்து 4 மணி 6 நிமிடங்கள் வரை இருக்கும்.

சந்திர கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் தப்பித்தவறி கூட இந்த விஷயங்களை செய்துவிடாதீர்கள்..!

சந்திர கிரகணம் 2024 எங்கெல்லாம் தெரியும்.?

  • செப்டம்பர் 18 ஆம் தேதி நிகழும் இரண்டாவது சந்திர கிரகணம் 2024 இந்தியாவின் பெரும்பாலான இடங்களில்  தெரியாது. ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும் என்றும் கூறபடுகிறது.
  • இந்திய நேரப்படி, பகல் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழ
  • சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நன்றாக தெரியும்.
  • இந்திய பெருங்கடல், ஆர்டிக், அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் சந்திர கிரகணத்தின் ஒரு பகுதி தெரியும் என்று கூறப்படுகிறது.

சந்திர கிரகணத்தன்று என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்ய கூடாது..? என்று தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement