40 நாட்களுக்கு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே வரும் 2025ல் வரவிருக்கும் சந்திர கிரகணம் செப்டம்பர் 07 தொடங்க உள்ளது. சந்திர கிரகணம் ஏற்படும் போது கிரகங்களின் ஒவ்வோரு அசைவும் மாறுபடும். சந்திர கிரகணத்தின் போது அசுர சக்திகள் உட்சத்தில் இருபதால் சந்திர கிரகணம் தொடங்கி முடியும் வரை சில ராசிக்காரர்களுக்கு நல்லது மற்றும் கெட்டது நடக்கும். அதில் இந்த 5 ராசிகாரர்களும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் சந்திர கிரகணம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை நிகழ்த்த உள்ளது.
மேலும், சந்திர கிரகணம் 2025 செவ்வாய் 07 தேதி இரவு 09.56 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 08 அதிகாலை 01.52 மணி வரை இருக்கும். சந்திர கிரகணத்துக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். சந்திர கிரகண நேரத்தில் சமைக்கவும், சாப்பிடவும் கூடாது. அதேபோல் கிரகணத்திற்கு முன்பு சமைத்த உணவை கிரகணம் முடிந்த பிறகு சாப்பிட கூடாது. புதிதாக உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும். சந்திரனும் ராகுவும் இணைவதை சந்திர கிரகணம் என்கிறார்கள். சந்திரன் பூமி நிழலில் சென்று ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். அசுர சக்திகள் அதிக வீரீயமுடன் இருப்பதால் தெய்வ சக்திகளின் பலம் குறைந்து இருக்கும். கோவில்கள் அனைத்தும் மூடியிருக்கும். இந்த 3 ராசிக்காரர்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டத்தை நிகழ்த்த உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
எந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்?

சந்திர கிரகணத்தின் போது ராகு மற்றும் கேது அதிக விஷ தன்மையை கொண்டியிருக்கும். இந்த வருடம் சந்திர கிரகணம் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிக நன்மையை அளிக்க உள்ளது. இந்த கிரகணம் கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது. அதே சமயத்தில் திரிகோண நிலையில் உள்ள மிதுனம், துலாம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும். சந்திர கிரகணம் அன்று பூரட்டாதி, விசாகம், புனர்பூசம், சதயம் நட்சத்திரகாரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சுமார் 40 நாட்கள் வரை சந்திர கிரகணத்தின் தாக்கம் இருக்க கூடும்.
3 ராசிகளின் நன்மைகள்
- கடந்த காலத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் மனதில் வலிமை, தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்து கொண்டியிருந்த விஷயங்கள் நிறைவேறும். நீங்கள்நினைத்து கொண்டியிருந்த வேலைகள் உங்களுக்கு கிடைக்கும்.
- எதிர்பாராத விதமாக உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.
- நீங்கள் எதிர்பாராத வகையில் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். உங்கள் வேலையில் உங்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும் அல்லது உங்களுக்கு பதவி உயர்வு போன்ற நன்மைகள் நடக்கும். தொழில் செய்து கொண்டியிருப்பவர்கள் தொழில் முன்னேற்றம் அடையலாம் மற்றும் இன்னொரு புதிய தொழிலை தொடங்குவீர்கள்.
- உங்களின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதிக ஆன்மிக ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பயணத்தின் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் புதிய உறவுகள் கிடைக்கும். இதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்குள் நெருக்கமான நட்புறவு அதிகரிக்கும்.
3 ராசிகளின் தீமைகள்
- சந்திர கிரகணத்தின் போது அரசியல் தலைவர்கள்,அரசு அதிகாரிகள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சந்திர கிரகணம் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
- விமானத்தில் பயணம் செய்யும் உயர் அதிகாரிகளும் கவனமாக இருக்க வேண்டும்.
- சந்திர கிரகணத்தின் போது வரும் பிரச்சனைகளை தவிர்க்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை தொடர்ந்து படிக்கலாம். மேலும், ஒரு கலசத்தில் நெல், தர்ப்பை புல் , துளசி , வெள்ளை நிறப் பூக்களை வைத்து அர்ச்சகர்களுக்கு தானமாக கொடுத்தால் உங்களின் பாதிப்பு குறைவாக இருக்கும்.













