சந்திர கிரகணம் 2024 கர்ப்பிணி பெண்கள் – Chandra Grahan for Pregnant Ladies 2024
இயற்கையாக வானில் நிகழும் நிகழ்வுகளில் கிரகணமும் ஒன்றாகும். இருப்பினும் இந்த கிரகணத்தை அறிவியலிலும் சரி, ஆன்மிகத்திலும் சரி மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கின்றன. அறிவியலில் இது அறிய நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், ஆன்மிகத்தில் இதை அசுபமாகவே பார்க்கப்படுகிறது. ஆக கிரகணம் நிகழும் நேரத்தின் போது சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்றும், சில விஷயங்களை பின்பற்ற கூடாது என்றும் ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அந்த வகையில் சந்திர கிரகணம் நிகழும்போது கர்ப்பிணிகள் சில விஷயங்கள் செய்யக்கூடாது. அதனால் சந்திர கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் மறந்தும்கூட இந்த தவறுகளை செய்ய கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்று இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சித்ரா பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் ! இந்த 5 ராசிக்கு கடும் ஆபத்து !
No: 1
பொதுவாக சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி அந்த கிரகணம் நிகழும் போது கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும். ஏன் என்றால் கிரகணம் நடைபெறும் போது அவற்றில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்கள் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுத்திவிடும் இதன் காரணமாக கிரகணம் நிகழும் போது கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
No: 2
கிரகணம் நிகழும் நேரத்தில் கர்ப்பிணிகள் கூர்மையாக இருக்கும் எந்த ஒரு பொருட்களையும் எடுத்து பயன்படுத்த கூடாது.
No: 3
கிரகணம் நிகழும்போது உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆக கிரகணம் நிகழுவதற்கு முன்பே உணவருந்திவிட்டு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. முடியாத பட்சத்தில் கர்ப்பிணிகள் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் மருந்துகளை உட்கொள்ள உணவை உட்கொள்ளலாம்.
No: 4
கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகள் என்றால் கிரகணம் நிகழும் போது வீடுகளில் உள்ள ஜன்னல் மற்றும் மதவுகளை மூடி வைக்க வேண்டும்.
கிரகணம் நிகழ்ந்து முடிந்தபிறகு உடனடியாக குளிப்பது மிகவும் சிறந்தது. இது அனைவருக்கும் பொருந்தும்.
No: 6
பொதுவாக கிரகணம் என்பதை ஆன்மிகத்தில் அசுபமாக கருதப்படுவதால் அந்த நிறத்தில் உறங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
No: 7
கர்பிணிப்பெண்கள் சந்திர கிரகணத்தின் போது எந்த வேலையும் செய்யாமல் முழு ஓய்வு எடுக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மே 5 இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. இந்த கிரகணத்தை எங்கு எப்படி பார்க்கலாம் முழு விவரம் இதோ..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |