சந்திர கிரகணம் பரிகார ஸ்லோகம் | Chandra Grahana Parihara Slokam..!
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…! பொதுவாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு செயலுக்கும் பரிகாரம் உள்ளது என்றும், மந்திரங்கள் உள்ளது என்றும் கூறுவார்கள். அதன் படி பார்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள், நினைத்தது நிறைவேற வேண்டும் என்று நினைத்த செயல்கள் என இவற்றிற்கும் பரிகாரம் செய்வது ஒரு பொது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் படி பார்க்கையில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் என இத்தகைய இரண்டு கிரகங்களும் மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இத்தகைய கிரகணத்தின் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். ஆகவே சந்திர கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய பரிகார ஸ்லோகம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க..!
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்
Chandra Grahana Parihara Slokam:
இந்த்ரோ (அ) நலோ தண்டதரஸ்ச ருக்ஷ:
பாசாயுதோ வாயுக்குபேர ஈசா:
குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த
சந்த்ரக்ரஹ தோஷ சாந்திம்.
சந்திர கிரகணம் என்பது மிகவும் முக்கியமான கிரகணமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இத்தகைய கிரகணத்தின் போது உணவுகளை நாம் சாப்பிடக்கூடாது என்றும் கூறுவார்கள்.
ஆகவே கிரகணத்தால் நமக்கு ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவை எல்லாம் விட்டு விலக மேல் கூறப்பட்டுள்ள பரிகார ஸ்லோகத்தை 9 மற்றும் 11 எண்ணிக்கை முறையில் கூற வேண்டும்.
சந்திர கிரகணம் மந்திரம்:
ஓம் கணேசாய நம
ஓம் நம சிவாய
ஓம் சரவண பவ
ஓம் சக்தி
ஓம் நமோ நாராயணா
சந்திர கிரகணம் எப்போது துவங்க இருக்கிறதோ, அத்தகைய 2 மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் இந்த மந்திரத்தை கூறுவது நல்லது.
கிரகணத்தின் போது செய்ய கூடாதவை:
- கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
- அதேபோல் கோவில்களுக்கு செல்லக்கூடாது.
- மேலும் கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்பில் இருந்து உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- சமைத்து வைத்து இருக்கும் உணவுகளை அப்படியே வைத்து இருக்காமல் அதில் அருகம்புல் போட்டு வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |