சந்திர பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு எந்த பக்கம் போனாலும் கஷ்ட காலமா இருக்கும்..

Advertisement

Chandra Peyarchi Affect These 3 Zodiac Signs 14 March 2025 in Tamil

சாதாரணமாக ஒவ்வொரு நாளும் நம்முடைய ராசிக்கான பலன்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அன்றைய நாள் நமக்கு எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொண்டால் அதற்கேற்றவாறு நாம் அன்றைய தினத்தை கழிக்கலாம். இது போலவே கிரகங்களின் பெயர்ச்சிகளை பார்ப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். ஏனென்றால் இந்த கிரக பெயர்ச்சியால் நமக்கு நன்மையும் நடக்கும், தீமையும் நடக்கும். இதனை அறிந்து கொண்டால் நாம் செய்யும் செயல்களை செய்வதில் கவனமாக இருக்கலாம். அந்த வகையில் மார்ச் 14-ம் தேதி சந்திரன் கன்னி ராசியில் கேதுவுடன் இணைகிறார். இதனால் மூன்று ராசிகளுக்கு கஷ்ட காலம். அதனால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

கன்னி:

கன்னியில் சந்திரன்

கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திரனின் பெயர்ச்சியானது போறாத காலம் என்றே சொல்லாம். எந்த பக்கம் சென்றாலும் இவர்களுக்கு அடி மேலே அடி வரும். இந்த ராசிக்கார்கள் வியாபாரம் செய்ய கூடியவர்களாக இருந்தால் ஏதும் புதியதாக முதலீடு செய்ய வேண்டாம். அது போல புதிய முயற்சிகள் ஏதும் எடுக்க வேண்டாம். மேலும் வியாபாரத்தில் வருமானம் ஆனது அன்றைய செலவுகளுக்கு கூட வராது. நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து எதிர்ப்பார்த்த வரவு கிடைக்காது, மாறாக நஷ்டம் ஆகும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள்.

குடும்பத்தில் இருக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களுக்குயிடையே பேசும் போது கவனமாக பேச வேண்டும். உங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இதன் உறவுகளுக்குக்கிடையே விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

பணம் கொட்ட போகிறது.! அள்றதுக்கு ரெடியா இருந்துக்கங்க.! யார் யாருன்னு தெரியுமா.?

தனுசு:

தனுசில்  சந்திரன்

தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திரனின் பெயர்ச்சியானது உடல் அளவிலும், மன அளவிலும் ரொம்பவே கஷ்டப்படுத்தும். இந்த கால கட்டத்தில் உங்களிடம் பணமே இருக்காது. 100 ரூபாய்க்கு மற்றவர்களிடம் கையேந்தும் நிலைமை ஏற்படும். உங்களுக்கு ஏற்கனவே யாரேனும் எதிரிகள் இருந்தால் அவர்களால் இப்போது அவர்கள் உங்களுக்கு நெருக்கடியை தருவார்கள். சொத்து அல்லது நிலம் சம்மந்தப்பட்ட சட்ட வழக்குகளை சந்திப்பீர்கள். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் நிம்மதியாக உட்கார்ந்து பேச முடியாது. மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள்.

அதுமட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். செரிமான பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக சாப்பிடுங்கள். தோல் மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை நாடுவது ஆவசியமானது.

மிதுனம்:

மிதுனத்தில் சந்திரன்

மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திரனின் பெயர்ச்சியானது பணியிடம் மற்றும் வீடு இரண்டும் நிம்மதியை தராது. பணியிடத்தில் நீங்கள் இந்த செயலை செய்தால் வெற்றி வரும் என்று நினைத்து செய்வீர்கள். ஆனால் இந்த செயலானது உங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தும். மேலும் உங்களின் செயலுக்கான அங்கீகாரமும், மதிப்பும் இருக்காது. இதனால் கவலை அடைவீர்கள். பல நேரங்களில் நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்காது. அதுமட்டுமில்லாமல் செலவுகள் அதிகமாக காணப்படும். இதனை சமாளிப்பதற்கு உங்களின் போதிய பணம் இல்லாததால் கடன் வாங்குவீர்கள்.

உங்களுக்கு இருக்கும் பல பிரச்சனையின் காரணமாக தூக்கம் வராது. தூக்கம் இல்லாததால் தலைவலி பிரச்சனை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிக்க முடியாது. அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள்.

சனி பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களை வச்சி செய்ய போகிறது.! இதுல உங்க ராசி இருக்கானு பார்த்துட்டு அலார்ட்டா இருந்துக்கோங்க.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement