Chandrashtama Andru Enna Seiya Vendum in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் என்ன தான் தொழில்நுட்பத்தால் வளர்ந்து கொண்டு வந்தாலும், இன்றும் ஆன்மீகத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்டவர்கள் எதை செய்தாலும், நல்ல நேரம் காலம் பார்த்து தான் செய்வார்கள். இப்படி இருக்கையில் ஜோதிட சாஸ்திரப்படி, நம் ராசிகளுக்கு சந்திராஷ்டமம் என்பது வரும்.
இந்த சந்திராஷ்டம நாளில் யாரும் அதிகமாக பேசாதீர்கள் என்று சொல்வார்கள். மேலும் இந்த சந்திராஷ்டம நாளில் சில நல்ல காரியங்கள் செய்ய வேண்டாம் என்றும் சொல்வார்கள். அதனால் நாம் இந்த பதிவின் வாயிலாக சந்திராஷ்டம நாளில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
சந்திராஷ்டமம் என்றால் என்ன:
பொதுவாக சந்திராஷ்டமம் என்றால் என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும்.
சந்திராஷ்டமம் என்பது சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். அதாவது சந்திரன் உங்கள் ராசிக்கு 8-ஆம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாள்களை தான் சந்திராஷ்டம காலம் என்று சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக, நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலத்தை தான் சந்திராஷ்டமம் என்று சொல்கின்றோம்.
ஒருவருடைய மனதிற்கு அதிபதியாக இருப்பவர் தான் சந்திரன். அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும் போது, நம் மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மேலும் மனம் அமைதியின்றி தவிக்கும் நிலை ஏற்படும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். அதனால் தான் சந்திராஷ்டமம் அன்று கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
எனவே சில நல்ல செயல்களை சந்திராஷ்டமம் அன்று செய்ய கூடாது என்று கூறுவார்கள். அதேபோல் சந்திராஷ்டமம் அன்று என்னவெல்லாம் செய்யலாம் என்றும் பார்க்கலாம் வாங்க.
சந்திராஷ்டமம் அன்று என்ன செய்யலாம்:
- சந்திராஷ்டமம் அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இதனால் மனதிற்கு தெளிவு கிடைக்கும்.
- அதுபோல அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.
- மேலும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் வரும் போது, நீங்கள் எந்த ஒரு செயலை துவங்குவதற்கு முன்பும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
- அதுபோல முன்னோர் வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்து வந்தால் நன்மை உண்டாகும். மேலும் எந்த தடைகளும் வராது.
- மேலும் இந்நாளில் அமைதியை கடைபிடிப்பது மிகவும் நல்லது.
அடுத்து நாம் சந்திராஷ்டமம் அன்று என்னவெல்லாம் செய்ய கூடாது என்று பார்க்கலாம்.
சந்திராஷ்டமம் அன்று செய்யக் கூடாதவை:
சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்கலாமா:
சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்குவது நல்லதல்ல. மேலும் சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, விலைமதிப்பு மிக்க பொருட்கள் வாங்குவது போன்ற செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா:
பொதுவாக சந்திராஷ்டமம் நாளில் பெரும்பாலும் சுப நிகழ்ச்சிகள் ஏதும் செய்ய மாட்டார்கள். அதேபோல் ஒரு ராசிக்கு சந்திராஷ்டமம் என்று அன்று திருமணம் செய்வது, நிச்சயம் செய்வது, திருமண நாள் குறிப்பது, வேறு எதற்கும் நல்ல குறிப்பது போன்ற நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
சந்திராஷ்டமம் அன்று நகை வாங்கலாமா:
பொதுவாக நம்மில் பலரும் நகை வாங்க செல்லும் போது அது நல்ல நாளா என்று தான் பார்க்கிறார்கள். ஆனால் அவர் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அதனால் நகை வாங்கும் போது உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். சுப நாளில் நகை வாங்குவது நலல்து.
மேலும் இதுபோல சுப காரியங்கள், முக்கியமான முடிவுகள் எடுப்பது, நல்ல விஷயத்திற்காக வெளியில் செல்வது, புதிதாக பொருட்கள் வாங்குவது போன்ற செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |