Chandrashtama Pariharam for 12 Zodiac Signs in Tamil | சந்திராஷ்டமம் பரிகாரம்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சந்திராஷ்டமம் நாளில் 12 ராசிகளும் என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் (Chandrashtama Pariharam for 12 Zodiac Signs in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். சந்திராஷ்டமம் என்பது, உங்கள் ராசிக்கு எட்டாவது இடத்தில இருப்பது ஆகும். சந்திராஷ்டமம் நாளில் புதிய முயற்சிகளை செய்ய கூடாது என்றும், எதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பெரும்பாலும் சந்திராஷ்டம நாளில் நற்பலன்கள் கிடைக்காது.
எனவே, சந்திராஷ்டம நாளில் 12 ராசிகளும் நற்பலன்களை பெற பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதனை பற்றி தான் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். அதாவது, ஒவ்வொரு ராசியினரும் சந்திராஷ்டம நாளில் எந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
சந்திராஷ்டமம் என்பது, சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம். அஷ்டமம் என்பது எட்டு என்று பொருள்படும். எனவே, சந்திரன், ஜென்ம ராசிக்கு எட்டாது இடத்தில் இருக்கும்போது அந்த நாள் சந்திராஷ்டமம் நாளாக கருதப்படுகிறது. சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் 54 மணிநேரம் சஞ்சரிக்கிறார். எனவே, சந்திரன் ராசிக்கு எட்டாவது இடத்தில் இருக்கும் காலம் சந்திராஷ்டமம் என்று கூறப்படுகிறது.
ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசியில் எட்டாவது இடத்தில் சஞ்சரிக்கும்போது மனதில் தேவையற்ற சஞ்சலங்கள், குழப்பங்கள் ஏற்படும். மனம் எப்போது குழப்பத்தில் இருந்து, சரியான முடிவு எடுக்க முடியாமலும் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலும் ஒழுங்கற்ற மனநிலையில் இருக்கும். இதனால், தான் சந்திராஷ்டம நாளில் எதிலும் எச்சரிக்கையாகவும், புதிய முயற்சிகளில் ஈடுப்பட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.
சந்திராஷ்டமம் அன்று 12 ராசிகளும் செய்யவேண்டிய தானமும் வழிபாடும்:
ராசிகள் | தானம் | வழிபாடு |
மேஷம் | துவரம் பருப்பு | முருகப்பெருமான் |
ரிஷபம் | மொச்சை | மஹாலக்ஷ்மி |
மிதுனம் | கற்கண்டு | பெருமாள் |
கடகம் | பச்சரிசி | அம்பிகை |
சிம்மம் | அவல் | சிவபெருமான் |
கன்னி | தேன் | கிருஷ்ன பகவான் |
துலாம் | சர்க்கரை | அம்பிகை |
விருச்சிகம் | துவரம் பருப்பு | செவ்வாய் பகவான் (அங்காரகன், வடிவேலவன்) |
தனுசு | பேரிச்சம்பழம் | குரு பகவான் |
மகரம் | கருப்பு நிற உணவு பொருட்கள் | ஆஞ்சநேயர் |
கும்பம் | கருப்பு நிற உணவு பொருட்கள் | ஆஞ்சநேயர் |
மீனம் | கற்கண்டு | பைரவர் |
மேலே கூறப்பட்டுள்ள அட்டவணை விவரங்களின் படி, சந்திராஷ்டம நாளில் 12 ராசிக்காரர்களும் அவர்களுக்கு ஏற்ற கடவுள் வழிபாடு மற்றும் தானத்தை செய்து விட்டு, அதன் பிறகு உங்கள் செயல்களை தொடங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், சந்திராஷ்டம நாளில் ஏற்படும் தடைகள்/பிரச்சனைகள் நீங்கள்.
சந்திராஷ்டமம் தினத்தில் இதை மட்டும் செஞ்சிடாதீங்க..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |