Chaturgrahi Yoga 2025 in Tamil | சதுர்கிரஹி யோகம் 2025
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் உருவாகும் சதுர்கிரஹி யோகத்தால் 12 ராசிகளில் 5 ராசிகள் மட்டும் மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை பேர் போகிறார்கள். அந்த அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம். மார்ச் மா தத்தில், மீன ராசியில் நான்கு கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. மீன ராசியில் சந்திரன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் சேர்வதால் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது.
புதன், சுக்கிரன் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் உருவாகும். இது 12 ராசிகளுக்கும் நன்மையை அளித்தாலும் குறிப்பாக ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு ஆகிய 5 ராசிகளுக்கு நல்ல பலனை அளிக்கும். முக்கியமாக இந்த 5 ராசிகளின் வாழ்க்கையில் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மிதுன ராசி:

சதுர்கிரஹி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இந்த காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கசப்புகள், பிணக்குகள் நீங்கும். பணியில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் பணவரவு வரக்கூடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை உண்டாகும்.
கன்னி ராசி:

கன்னி ராசியின் ஏழாவது வீட்டில் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. இதனால், கணவன் மனைவி இடையே நல்ல ஒற்றுமையும் ஆதரவும் உருவாகும். இதுவரை இருந்துவந்த வழக்கு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முறையில் முடிக்கு வரும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தனித்திறமை மேம்படும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
2025 யில் நடக்கும் சூரியன் பெயர்ச்சியினால் இந்த 2 ராசிக்கு பணமழை கொட்டப்போகிறது.!
ரிஷப ராசி:

சந்திரன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை ரிஷப ராசியின் 11 -வது வீட்டில் நடைபெறுவதால் ரிஷப ராசிகாரகர்களுக்கு அனைத்து விதத்திலும் இக்காலம் நன்மையை அளிக்கும். இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சேமிப்பதில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.
தனுசு:

சந்திரன், ராகு, புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும். வருமாம் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குறிப்பாக வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். நிதிநிலைமை மேம்படும். எனவே, அனைத்து விதத்திலும் சதுர்கிரஹி யோகம் பல நன்மைகளை அளிக்கும்.
கடகம்:

சதுர்கிரஹி யோகம், கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதுவரை நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் நல்ல முறையில் முடிவடையும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் கனவு இக்காலத்தில் நினைவாகும். உங்கள் ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். படிக்கும் மாணவர்கள் அவர்கள் இலக்குகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். எனவே, அனைத்து விதத்திலும் சதுர்கிரஹி யோகம் சாதகமான பலன்களை அளிக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













