செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..! செவ்வாய் தோஷம் நிவர்த்தி..! Sevvai dosham nivarthi in tamil

Advertisement

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்..! செவ்வாய் தோஷம் நிவர்த்தி..! Sevvai Dosham Nivarthi in Tamil..!

செவ்வாய் தோஷம் நிவர்த்தி (Sevvai dosham nivarthi in tamil) / chevvai dhosam poga: செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறிவர்கள். அத்தகைய செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

செவ்வாய் பகவான்:

  • ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரனுக்கு 1,2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
  • அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என ஜோதிடம் கணிக்கிறது.
  • 1,2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

தோஷத்திற்கு தோஷ ஜாதகம்:

  • செவ்வாய் தோஷம் பரிகாரம் தலம் – தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
  • ஆண் ஜாதகருக்கு லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்க்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வது நல்லது, அதேபோல 2,4,12 ஆகிய எந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடைய ஜாதகரோடு திருமணம் செய்வதும் நல்லது.

செவ்வாய் ஆட்சி உச்சம்:

  •  செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமற்ற நிலை ஏற்படும் என கருதுகின்றனர்.
  • காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குறையும் என்றும் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது என்றும் கூறி வருகிறார்கள்.
ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா???

செவ்வாய் தோஷம் பரிகார தலம்:

  • செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்  செவ்வாய் தோஷத்தால் தடை ஏற்பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும். சீர்காழி அருகே தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் நவகிரகங்களில் செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
  • இங்கு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமி, தன்வந்திரி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

செவ்வாய் தோஷம் நிவர்த்தி – செவ்வாய் பகவானுக்கு வழிபாடு:

  • செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்  செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அரசமரத்தடி விநாயகர், ஆதி வைத்தியநாதரை வழிபட்டு ஆலமரத்தை சுற்றி வரவேண்டும்.
  • வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செவ்வாய்க்கு அதி தேவதையான முருகப்பெருமானை வழிபடவேண்டும்.
  • அங்காரகன் சன்னதியில் உள்ள அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட தோஷம் நீங்கும்.

தைரியம் வீரம் தரும் செவ்வாய் விரதம்:

  • செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் – செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள்.
  • செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கும்.
  • செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நல்லது.  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும். சகோதரர்களுடன் உறவு பலப்படும்.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்

  • இந்த செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் – செவ்வாய் கிழமையன்று, முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, துவரை தானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
  • செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம் – திருமணம் தடைபட்டால் செவ்வாயன்று மதியம் 03.00 மணி முதல் 04.00 மணிக்குள் ராகு காலத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படிப்பது மிகவும் நல்லது.
சுக்கிர தோஷம் நீங்க பரிகாரங்கள்!!!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement