வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சின்ன சின்ன முருகையா பாடல் | Chinna Chinna Murugaiya Song lyrics in Tamil

Updated On: November 28, 2025 4:50 PM
Follow Us:
chinna chinna murugaiya song lyrics in tamil
---Advertisement---
Advertisement

சின்ன சின்ன முருகையா

இந்துக்களின் தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி பக்தியுடன் வணங்கிட நிறைய முருகன் பக்தி பாடல்கள் வரிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் அந்த பக்தி பாடல் வரிகளில் ஒன்று தான் சின்ன சின்ன முருகையா என்னும் முருகன் பாடல். முருகனை அனைவருக்கும் பிடிக்கும். அவருக்கு உரிய பலகாரங்கள், சூடம், சாம்பிராணி, பக்தி போன்றவை காண்பித்து அவரை வணங்குவோம். அதோடு மட்டுமில்லமால் மந்திரம், போற்றி போன்றவற்றை கூறி வணங்குவதால் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும். அதனால் தான் இந்த பதிவில் சின்ன சின்ன முருகையா பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

சின்ன சின்ன முருகையா பாடல் வரிகள் PDF Download

சின்ன சின்ன முருகையா பாடல் வரிகள் pdf download:

Murugan song sung by Kalamekapulavar | காளமேகப்புலவர் பாடிய முருகன் பாட்டு

சின்ன சின்ன முருகா முருகா
சிங்கார முருகா!
சிந்தையிலே வந்து ஆடும்
சீரலைவாய் முருகா முருகா!

எண்ணமதில் திண்ணமதாய்
எப்போதும் வருவாய் அப்பா!
ஏற்றி உன்னை பாடுகின்றேன்
ஏரகத்து முருகா முருகா!

அப்பனுக்கு உபதேசித்த
அருமை குருநாதனுமாய்
சுவாமி மலையில் அமர்ந்தவனே
சுவாமிநாத குருவே அப்பா!

பாலும் தேன் அபிஷேகமும்
பக்தர்களின் காவடியும்
பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
பரங்கிரி தேவனாகி

அகங்காரமும் ஆத்திரமும்
அகந்தைகளை விட்டு விட்டு
அடைக்கலமாய் ஓடி வந்தேன்
ஆறுமுக வேலவனே!

முக்திக்கு வழிதேடிய
முதியோரும் இளைஞர்களும்
மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்
மாதவன் பால் மருகனே வாவா!

சின்ன சின்ன முருகையா பாடல் | Chinna Chinna Murugaiya Song lyrics in Tamil

தமிழ் மொழி காத்த தலைவன் ஐயா
ஞான பழம் கேட்ட குழந்தை ஐயா
அப்பனுக்கு பாடம் சொல்லி
ஆறுபடை ஆட்சி செய்யும்
என் சாமி முருகன் ஐயா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

Chinna Chinna Murugaiya Song lyrics in Tamil:

சுப்ரமணியன் சாமி என்பார்
கார்த்திகேயன் என்பார்
சுவாமிநாதன் என்பார்
குக அமுதன் என்பார்
பாலசுப்ரமணியன் என்பார்
கருணாகரன் என்பார்

கதிர் காம கந்தன் என்பார்
கதிர்வேல சாமி என்பார்
சேனாதிபதி என்பார்
கதிர்வேலன் என்பார்
பரமகுரு என்பார்
முத்துக்குமாரன் என்பார்

சூரனை கூறு போட்டவனாம்
சுனாமியை விரட்டி விட்டவனாம்
போகர் கொடுத்த பொக்கிஷமாம்
பஞ்சாமிர்த பிரியனாம்
பக்தமலை சாமியாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி

Chinna Chinna Murugaiya Song lyrics in Tamil:

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

தமிழ் செல்வன் என்பார்
சத்குண சீலன் என்பார்
மயூர வாகனன் என்பார்
மருதமலை ஆண்டவன் என்பார்
சென்னிமலை சுவாமி என்பார்

சிவன்மலை வேலா என்பார்
ஞான வடிவேலன் என்பார்
வேலாயுத சாமி என்பார்
தேவாதி தேவன் என்வார்
கந்த குரு என்பார்

அவ்வையிடம் ஆசி பெற்றவனாம்
அப்பனுக்கே பாடம் சொன்னவனான்
கார்த்திகை பெண்ணிடம் வளர்ந்தவனாம்
தென் தமிழ் காத்த தெய்வமாம்

மயூர வாகனத்தில் வருபவனாம்
சித்தாதி சித்தனாம்
சக்தி கவசம் கொண்டவனாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம் முருகன்

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

குன்ற குடியான் என்பார்
பழனிமலை நாதன் என்பார்
வடபழனி ஆண்டவன் என்பார்
சரவணன பவன் என்பார்
விமலன் சாமி என்பார்

தண்டாயுதபாணி என்பார்
கலியுக வரதன் என்பார்
வெற்றி வடிவேலன் என்பார்
வீர வடிவேலன் என்பார்
மரகத வண்ணன் என்பார்

Chinna Chinna Murugaiya Song lyrics in Tamil:

ஞான பழம் கேட்டவனாம்
நம்பினோரை நாடுபவனாம்
காவடி பிரியனாம்
ராஜா அலங்காரன் கொண்டவனாம்

ஆண்டியாய் நின்றானாம்
ஆனால் செல்வதை எல்லாம்
கொடுப்பானாம்
அப்படி பட்ட முருகன் அவன்
ரொம்ப ரொம்ப சின்னவனாம் சுவாமி

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

நெற்றி கண்ணில் பிறந்தவனே
உன்னை சுத்துதையா மக்கள் ஜனம்
எட்டுத்திக்கும் தமிழ் காத்த
பேரழகா வாரும் ஐயா

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

சூரனையே வேரறுத்த
சுப்பிரமணி நீதான் ஐயா
கடல் அலைய விரட்டி விட்ட
செந்தூர் வடிவேலன் ஐயா

Chinna Chinna Murugaiya Song lyrics in Tamil:

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

திண்டாட்டமே இல்லாமலே
மக்கள் கொண்டாட்டம வாழ வைக்கும்
பத்திரமா பழநியிலே
உலகை நின்றாளும் ஆண்டவனே

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

கந்தன் துதி கவசம் படி
உன்னை பிடிச்ச விதி
நொறுக்குமடி
கந்தவேலன் கால புடி
நாம்ம நினைச்சதெல்லாம்
நடக்குமடி

சின்ன சின்ன முருகையா
சிங்கார முருகையா
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்
செந்தில் வடிவேலன் அவன்

வா முருகா வேல் முருகா
வா முருகா வேல் முருகா
வா முருகா வேல் முருகா
வேல் முருகா வேல் வேல்

வா முருகா வா வா
வேல் முருகா வேல் வேல்
வா முருகா வா வா
வேல் முருகா வேல் வேல்

வெற்றிவேல் முருகனுக்கு
அந்த வீர வேல் முருகனுக்கு
அரோகரா அரோகரா
அரோகரா…

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now